Puducherry : புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணன் பதவியேற்பு...

புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணன் பதவியேற்பு...

புதுச்சேரி சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவியேற்றார். அவருக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 23 நாட்களுக்குப் பின்னர் இன்று எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் பதவியேற்றனர்.

  • Share this:
புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதி வெளியானது. வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்கு தேர்தல் துறை சான்றிதழ்களை வழங்கியது. ஆனால் எம்எல்ஏக்கள் கடந்த 23 நாட்களாக பதவியேற்கவில்லை. அதேநேரத்தில் ரங்கசாமி முதல் அமைச்சராக கடந்த 7ம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 9ம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 17ம் தேதி புதுச்சேரி திரும்பினார். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி அவர் வீட்டு தனிமையில் இருந்தார்.

இதனிடையே தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணன் எம்எல்ஏவை பரித்துரைத்து ரங்கசாமி கடந்த 9ம் தேதி அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் தமிழிசை அனுமதியளித்தார். இதனையடுத்து தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணன் பதவியேற்பு விழா இன்று நடந்தது.

காலை 9 மணிக்கு லட்சுமிநாராயணன் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். மாளிகையின் முதல் தளத்தில் பதவியேற்பு விழா நடந்தது. 9.35 மணிக்கு தமிழிசை விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா தொடங்கியது.

தமிழிசை


மேலும் படிக்க... திருச்சியில் கொரோனாவுக்கு போலி சித்த மருந்துகளை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை...

அதன் பின்னர் தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணனுக்கு தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடவுளின் பெயரால் லட்சுமிநாராயணன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.  அத்துடன் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 23 நாட்களுக்குப் பின்னர் இன்று எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் பதவியேற்றனர். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.

லட்சுமிநாராயணனுக்கு தமிழிசை சால்லை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்தார். விழாவில் லட்சுமிநாராயணன் குடும்பத்தினர், ராஜ்பவன் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: