சட்டமன்றத்தில் உரை நிகழ்த்த வராத துணைநிலை ஆளுநர் கிரண்பேடி: அவை நடவடிக்கை ஒத்திவைப்பு...

பட்ஜெட் தாக்கல் நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என்றும் அதுவரை சட்டமன்ற கூட்டத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் கூறி 10 நிமிடத்தில்  ஒத்திவைத்தார். புதுச்சேரி வரலாற்றில் சட்டமன்றத்தில் உரையாற்ற  ஆளுநர் வராதது இதுவே முதல்முறை

சட்டமன்றத்தில் உரை நிகழ்த்த வராத துணைநிலை ஆளுநர் கிரண்பேடி: அவை நடவடிக்கை ஒத்திவைப்பு...
புதுச்சேரி சட்டமன்றம்
  • Share this:
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையாற்ற வராத காரணத்தால் புதுச்சேரி சட்டமன்ற நிகழ்வுகள் பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதுச்சேரியில் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 9 மணிக்கு கூடியது. ஏற்கனவே அறிவித்தபடி  காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி  உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் துணைநிலை ஆளுநர் காலை 9.40 மணி வரை வரவில்லை. திட்டமிட்டபடி 9:30 மணிக்கு சட்டமன்றம் கூடியது.ஆளுநருக்கு மரியாதை அளிக்க காவலர்கள் தயாராக இருந்தனர். 10 நிமிடம் வரை காத்திருந்த பிறகும் துணைநிலை ஆளுநர் வரவில்லை.


இருப்பினும் சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டமன்ற நிகழ்வுகளை துவங்கினார். அப்போது துணை ஆளுநர் உரையாற்ற வரவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

Also read... திருமணமாகி 22 நாளே ஆன இளைஞர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு...!

மேலும் உரையாற்றிய ஆளுநர் வரவில்லை என்பதால் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்யப்படுவதாகவும் சட்டமன்றத்தின் அடுத்த நிகழ்வான பட்ஜெட் தாக்கல் நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என்றும் அதுவரை சட்டமன்ற கூட்டத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் கூறி 10 நிமிடத்தில்  ஒத்திவைத்தார். புதுச்சேரி வரலாற்றில் சட்டமன்றத்தில் உரையாற்ற  ஆளுநர் வராதது இதுவே முதல்முறை
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading