முகப்பு /செய்தி /இந்தியா / Puducherry election results 2021: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி தொடர் முன்னிலை!

Puducherry election results 2021: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி தொடர் முன்னிலை!

புதுச்சேரி

புதுச்சேரி

என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 20 -24 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று தேர்தல் முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.

  • Last Updated :

புதுச்சேரியின் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கியது. மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளுக்கான வாக்குகள் லாஸ்பேட்டையில் உள்ள மூன்று மையங்களில் எண்ணப்படுகின்றன. காரைக்காலில் 5, மாகி, ஏனாமில் தலா ஒன்று என 7 தொகுதிகளுக்கு எண்ணப்படுகிறது.

கொரொனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அறையில் போடப்பட்ட 7 டேபிள்கள் 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் முடிவுகள் தாமதமாகும் என தேர்தல் துறை தெரிவித்துவிட்டது.

தொடர்ந்து புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில், 8 தொகுதிகள் வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் கட்டமாக மண்ணாடிப்பட்டு, மங்கலம், கதிர்காமம், காமராஜர்நகர், லாஸ்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, ஏம்பலம், காரைக்காலில் நெடுங்காடு, திருநள்ளாறு தொகுதிகளுக்கும், மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகள் என மொத்தம் 12 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முதல் கட்டமாக நடைபெறுகிறது.

முதல் 8 தொகுதிகளுக்கான முடிவுகள் பிற்பகல் 1 மணிக்குத் தெரியவரும். இதனைத் தொடர்ந்து, 2-வது கட்டமாக புதுச்சேரியில் உள்ள திருபுவனை, வில்லியனூர், இந்திராநகர், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, உருளையன்பேட்டை, அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம் ஆகிய 8 தொகுதிகள் மற்றும் காரைக்காலில் காரைக்கால் வடக்கு, தெற்கு ஆகிய 2 தொகுதிகள் என மொத்தம் 10 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகிறது.

மூன்றாம் கட்டமாக, புதுச்சேரியில் ஊசுடு, உழவர்கரை, தட்டாஞ்சாவடி, ராஜ்பவன், முதலியார்பேட்டை, மணவெளி, பாகூர் ஆகிய 7 தொகுதிகள் மற்றும் காரைக்காலில் நிரவிதிருப்பட்டினம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

புதுச்சேரியில் மொத்தம் 81.70 சதவீதம் வாக்குகள் பாதிவாகின. இங்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 20 -24 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று தேர்தல் முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.

அதன்படி, காலை 11 மணி நிலவரப்படி என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 11 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர்கள் ஜான்குமார், நமச்சிவாயம் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் வெற்றி பெற்றுள்ளார். மேலும், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி வெற்றி பெற்றுள்ளார்.

First published:

Tags: Election Result, Puducherry Assembly Election 2021, Puduchery