திமுக 13, காங்கிரஸ் 15... புதுச்சேரியில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நிறைவு

நாரயணசாமி - மு.க.ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே சுமார் 3 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

  • Share this:
    புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் திமுக 13 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் 2 தொகுதிள் போட்டியிடுவதாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி போட்டியிட உள்ளது. அங்குள்ள 30 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுடன் பங்கீடு செய்வது குறித்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

    இறுதியாக இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே சுமார் 3 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக தரப்பில் ஜகதரட்சகன் எம்.பி., புதுச்சேரி தரப்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, புதுச்சேரியில் திமுகவுக்கு 13 தொகுதிகளும், காங்கிரசுக்கு 15 தொகுதிகளும், கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் வி.சி.க கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுடனான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தானது.
    Published by:Vijay R
    First published: