இன்று கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை... புதிய சபாநாயகர் பதவியேற்கிறார்!

புதுச்சேரி சட்டமன்றம்

பாஜக எம்.எல்.ஏ. செல்வத்தை தவிர வேறுயாரும் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

 • Share this:
  புதுச்சேரியில் 15ஆவது சட்டபேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. பாஜக எம்.எல்.ஏ. செல்வம் சபாநாயகராக இன்று பதவியேற்கிறார்.

  தமிழகத்தைப் பாலவே, புதுச்சேரி சட்டமன்றத்திற்கும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளின் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. அங்கே ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 16 இடங்களை இந்த கூட்டணி பெற்றிருந்தது. இதனால் வெற்றி பெற்ற அந்த கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பாஜக தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அமைச்சரவை பதவி இடங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு கட்சிகளும் பேசிக் கொண்டதையடுத்து பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் முதலமைச்சராக மே 7ஆம் தேதி ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார்.

  Read More :  வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி: அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு!

  இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்தது. இதில் பாஜக எம்.எல்.ஏ. செல்வத்தை தவிர வேறுயாரும் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.

  Must Read : தமிழகத்தில் கொரோனா 3வது அலை வர வாய்ப்பு; குழந்தைகள் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க உத்தரவு!

  இதனால் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இன்று காலை சட்டப்பேரவை கூடும் நிலையில், தற்போதைய சபாநாயகர் லட்சுமி நாராயணன், புதிய சபாநாயகராக செல்வம் தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிடுவார். அதனைத் தொடர்ந்து செல்வம் இன்று காலை சபாநாயகராக பதவியேற்கிறார்.

  புதுச்சேரி அரசியல் வரலாற்றில், பாஜகவைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: