புதுச்சேரியின் கூவமாக மாறும் அரிக்கன்மேடு ஆறு - செத்து மிதக்கும் மீன்கள்

புதுச்சேரியின் கூவமாக மாறிவருகிறது அரிக்கன்மேடு ஆறு. அதில் மீன்கள் செத்து மிதப்பது தொடர்கதையாகியுள்ளது.

புதுச்சேரியின் கூவமாக மாறும் அரிக்கன்மேடு ஆறு - செத்து மிதக்கும் மீன்கள்
புதுச்சேரியின் கூவமாக மாறும் அரிக்கன்மேடு ஆறு.
  • Share this:
கிழக்குக் கடற்கரையை ஒட்டியுள்ள புதுச்சேரி நகரின் மிக அருகில் அரியாங்குப்பம் பகுதியில் அரிக்கன் ஆறு உள்ளது. புதுச்சேரியில் போர்ச்சுகீசியர் ஆட்சி புரிந்தபோது அரிக்கன்மேடு என்ற கடலோரப் பகுதியில் வணிகத் தளம் அமைக்கப்பட்டது. இதனையொட்டி ஓடிய அரிக்கன் ஆற்று வழியே போக்குவரத்து நடந்துள்ளது.

இத்தனை வரலாற்றுப் புகழ்மிக்க ஆற்றின் இரு புறமும் தற்போது வளர்ந்துள்ள மாங்குரோவ் காடுகள் பல உயிரினங்களின் புகலிடமாக இருக்கின்றன. புதுச்சேரியின் இயற்கை படகு துறையாக உள்ள இப்பகுதி இன்று, "புதுச்சேரியின் கூவம்" என்ற அடைமொழியை எட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நகரப் பகுதியில் சேரும் மனிதக் கழிவுகள் இந்த ஆற்றில் திருப்பிவிடப்படுவதாகவும், ஆடு, மாடு, கோழிகளின் கழிவுகளும் இதில் கொட்டப்படுவதாலும் மீன்கள் இப்படி செத்து மிதப்பதாக கவலையுடன் கூறுகிறார் அரியாங்குப்பம் மீனவர் குமரன்.


Also see:

ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பது குறித்து தகவல் அறிந்த புதுச்சேரி அரசின் சுற்றுச்சூழல் துறை செயலர் ஸ்மித்தா சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். ஆற்றில் பிளாஸ்டிக் உட்பட பல கழிவுகள் கொட்டுவது சட்டப்படி குற்றம். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.மாங்குரோவ் காடுகளால் பல உயிரினங்கள் வாழ்கின்றனர். பிளாஸ்டிக் குப்பை கரைகளை அடைத்து மாங்குரோவ் மரங்களின் வளர்ச்சியை அழிப்பதுடன் மனித இனத்திற்கே பேராபத்தை ஏற்படும் என எச்சரிக்கிறார் வன உயிரின ஆராய்ச்சியாளர் பூபேஷ் குப்தா.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading