புதுச்சேரி முதல்வரை கைது செய்யவேண்டும்., விவசாயிகளுக்காக பணியாற்றும் தமிழக முதல்வரை விமர்சிக்க தகுதியில்லை - அதிமுக எம்.எல்.ஏ

விவசாயிகளுக்காக தொடர்ந்து பணியாற்றும் தமிழக முதல்வரை விமர்சிக்க புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு தகுதியில்லை என அன்பழகன் கூறினார்.

புதுச்சேரி முதல்வரை கைது செய்யவேண்டும்., விவசாயிகளுக்காக பணியாற்றும் தமிழக முதல்வரை விமர்சிக்க தகுதியில்லை - அதிமுக எம்.எல்.ஏ
அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன்
  • News18
  • Last Updated: September 23, 2020, 2:13 PM IST
  • Share this:
கொரோனா காலத்தில் புதுச்சேரியில் மக்களை போராட்டத்திற்கு தூண்டும் முதல்வர் நாராயணசாமியை கைது செய்ய வேண்டும் என அதிமுக வலியுறுத்துகிறது. அதிமுக புதுச்சேரி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், விவசாய சட்டங்களை எதிர்த்து புதுச்சேரியில் 28-ஆம் தேதி முதல்வர் தலைமையில் போராட்டம் என்ற அறிவிப்பை மத்திய அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.



Also read... புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்காததை கண்டித்து மாணவர்கள் போராட்டம்..


போராட்டம் என்ற பெயரில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்த அவர், மீறி போராட்டம் நடத்த முயன்றால் முன் எச்சரிக்கையாக முதல்வர் நாராயணசாமியை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அன்பழகன், விவசாயிகளுக்காக தொடர்ந்து பணியாற்றும் தமிழக முதல்வரை விமர்சிக்க புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு தகுதியில்லை எனவும் கூறினார்.
First published: September 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading