புதுச்சேரியில் 21 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு: துணைநிலை ஆளுநர் தமிழிசை கவலை

புதுச்சேரியில் 21 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி கவலை அளிக்கிறது என துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை தெரிவ

புதுச்சேரியில் 21 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி கவலை அளிக்கிறது என துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை தெரிவ

  • Share this:
புதுச்சேரியில்  21 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கவலையளிப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் தொடர் முயற்சியாக 20-வது வாராந்திர கோவிட் மேலாண்மை சீராய்வுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் புதுச்சேரியில் கொரோனா நிலவரம், மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், கரும்பூஞ்சை நோய், தடுப்பூசி குறித்து படக்காட்சி மூலம் விளக்கினார். துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமை தாங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ‘புதுச்சேரியில் 21 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி கவலை அளிக்கிறது. அதனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் கவனமாகவும் எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும். குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறித்த முழுமையான தகவல் அடங்கிய ஆய்வறிக்கை அளிக்க வேண்டும். சூழ்நிலையைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.• ஒருவேளை குழந்தைகளை கொரோனா தொற்று தாக்கினால் எதிர்கொள்வதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்கனவே செய்யப்பட்டிருப்பது குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க பெரிதும் உதவுகிறது’ என்றார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2,400 பேருக்கு கொரோனா பாதிப்பு: 49 பேர் உயிரிழப்பு...


கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் எந்த நேரத்திலும் மூன்றாவது அலை தாக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வோடு அனைவரும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய தமிழிசை, ‘தடுப்பூசியால் புதுச்சேரி வேகமாக முன்னேறி வருகிறது. ஆனாலும், ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தீவிரமாக தடுப்பூசிச் செலுத்துவதை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளை வெளியில் கூட்டிச் செல்வதும் உறவினர்களை வீட்டிற்கு அழைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

அனைத்து குழந்தை நல மருத்துவர்களும் பொது நல மருத்துவர்களும் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறதா என்பதைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்,குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பான சிகிச்சைகள் அவர்களை அபாய கட்டத்தில் இருந்து காப்பாற்றியிருக்கிறது.அனைவரும் இணைந்து கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தீவிரமாக இயங்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: வாழும் வரலாறாக விளங்கும் தோழர் என்.சங்கரய்யா - சிறப்புத் தொகுப்பு!


பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது என்பதையும் முழுகவனத்தில் கொண்டு எப்பொழுதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த அவர்,  ‘ஒவ்வொரு வாரமும் நடைபெறும் சீராய்வுக் கூட்டம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம் வகுக்கவும், அவற்றை முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெறவும் பெரிதும் உதவியாக இருக்கிறது’ என கூறினார்.
Published by:Murugesh M
First published: