• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சிறைச்சாலையில் போடப்பட்ட திட்டம்.. புதுச்சேரியை பதறவைத்த இரட்டைக்கொலை

சிறைச்சாலையில் போடப்பட்ட திட்டம்.. புதுச்சேரியை பதறவைத்த இரட்டைக்கொலை

ரவுடி பாம் ரவி கொலை வழக்கில் கைதானவர்கள்

ரவுடி பாம் ரவி கொலை வழக்கில் கைதானவர்கள்

புதுச்சேரியில் ரவுடி மற்றும் அவரது நண்பரை வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
புதுச்சேரியில் ரவுடி பாம் ரவி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி வாணரப் பேட்டையை சேர்ந்தவர் ரவுடி பாம் ரவி (வயது 33). இவர் மீது கொலை வழக்குகள் உட்பட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஜாமீனில் வெளிவந்த இவர் தனது நண்பரான அந்தோணி பரீட் ஸ்டீபன் (வயது 28) என்பவருடன் நேற்று முன்தினம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வாணரப்பேட்டை ஆலன் வீதி அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் இவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெட்டியும் படுகொலை செய்தது.

போலீசாரின் தீவிர விசாரணையில் கொலை திட்டம் புதுச்சேரியின் காலாப்பட்டு சிறைக்குள் நடைபெற்றது தெரியவந்தது. முதலியார்பேட்டை சேர்ந்த ரவுடி வினோத்திற்கும் பாம் ரவிக்கும் இடையே தொழில் போட்டி இருந்துள்ளது. இதில் வினோத்திற்கு ஆதரவாக வேலை செய்து திப்லான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி அடித்தே கொலை செய்யப்பட்டார். திருந்தி வாழ முயன்றவனை கொன்றதற்காக அவரது பிறந்த நாளான மே 22ஆம் தேதி அவரது ஆதரவாளர்கள் கல்லறையில் பட்டாக்கத்தி வெட்டி கொலைக்கு காரணமான ரவுடி பாம் ரவியை  தீர்ப்போம் என சபதம் ஏற்றனர்.

Also Read:  எதிரிக்கு எதிரி நண்பன் ஃபார்முலா.. பாமக மாவட்ட செயலாளர் கொலையில் திடீர் திருப்பம்

இதற்காக ரவுடி வினோத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்த ஜூன் 6ஆம் தேதி வாணரப்பேட்டையில் வெடிகுண்டுகளுடன் காத்திருந்தனர்.  ஆனால் பாம் ரவி வராத காரணத்தினால் முத்தியால்பேட்டை சாய்பாபா திருமண மண்டபம் அருகே சென்றபோது அங்கு ஒரு வெடிகுண்டை வீசி தங்களது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டனர். இதனிடையே 100 அடி சாலையில் ஜான்பால் நகரில் இயங்கி வந்த சூதாட்டம் கிளப்பிற்குள் புகுந்து 4 லட்ச ரூபாய் பறித்த வழக்கில் கடந்த மாதம் 19ம் தேதி ரவுடி வினோத் கைது செய்யப்பட்ட காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையிலிருந்த ரவுடி வினோத் மற்றும் அவரது ஆதரவாளர் தீன் இருவரும் சேர்ந்து செல்போன் மூலம் வெளியில் உள்ள  ஆதரவாளர்கள் ரவுடி பாம் ரவியை கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்காக ஏற்கனவே தனக்கு பழக்கமாகி இருந்த காஞ்சிபுரம் கூலிப்படையை வினோத் ஏற்பாடு செய்தார். ரவுடி பாம் ரவியை கொலை செய்வதற்கு காஞ்சிபுரத்திலிருந்து கூலிப்படை கடந்த வாரம் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.

Also Read: சென்னையில் ஸ்டார் ஹோட்டலில் மதுபோதையில் இளம்பெண்கள் ரகளை

ஒரு ஓட்டலில் தங்கி கொலைக்கு தேவையான நாட்டு வெடிகுண்டு, மோட்டார்சைக்கிள், வீச்சரிவாள் ஆகியவற்றை வினோத்தின் ஆதரவாளர்கள் கொடுத்துள்ளனர். ஒருவாரமாக பாம் ரவி எங்கு செல்கிறார் என நோட்டமிட்டு இருந்த இந்த குழுவினர் நேற்று முன்தினம் கொலையை செய்துள்ளனர். இவ்வழக்கில்  ஏற்கனவே சிறையில் இருக்கும்  வினோத் மற்றும் தீன் ஆகியோர்  மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

மேலும் கொலைக்கு திட்டமிட்ட வினோத்தின் தாய் ரமணி (59) முதலியார்பேட்டை லயன் அரவிந்து (21) வாணரப்பேட்டை பிரகாஷ் (36) அன்னைதெரசா நகர் ராஜேஷ் (35)இந்திரா நகர் சந்துரு (26)வாணரப் பேட்டை வெங்கடேசன் நவீன் (20)  ஆகிய ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடி உள்ள காஞ்சிபுரம் கூலிப்படையை  போலீசார் தேடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: