• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரி ரயில் பாதையில் நாட்டு வெடிகுண்டு சோதனை: ரவுடிகளுக்கு போலீஸ் வலை

புதுச்சேரி ரயில் பாதையில் நாட்டு வெடிகுண்டு சோதனை: ரவுடிகளுக்கு போலீஸ் வலை

போலீசார் ஆய்வு

போலீசார் ஆய்வு

நாட்டு வெடிகுண்டு தயாரித்து  ரயில்பாதையில்  வீசி சோதித்த ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர்

  • Share this:
புதுச்சேரியில் ரயில் பாதையில்  நாட்டு வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்ட ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்குப்பட்ட வாணரப்பேட்டை காளியம்மன் தோப்பு பகுதியில் உப்பனாற்றை கடந்து செல்லும் ரயில் பாதை உள்ளது. பயனற்ற இந்த பாதை ஒதுக்குபுறமாக இருக்கிறது. இதன் அருகில் நேற்று பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறியது.

சத்தம் கேட்டு, அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தபோது புகை மூட்டமாக இருந்தது. இது குறித்து ஒதியஞ்சாலை போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குண்டு வெடித்த பகுதியை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரவு நேரம் என்பதால் விசாரணை நடத்த முடியவில்லை. இதையடுத்து, மீண்டும் இன்று காலைரயில் பாதையில் போலீசார் சோதனையிட்டனர்.அப்போது உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி அங்கு வந்து விபரம் கேட்டறிந்தார்.  முதல்கட்ட விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலர், தாங்கள் தயாரித்த நாட்டு வெடிகுண்டு சரியாக வெடிக்கிறதா என சோதனை செய்து பார்த்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரி சிறையில் கைதிகளுக்கு தொழில் பயிற்சி: நம்பிக்கைத் தரும் புதிய திட்டங்கள்...


இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த சில ரவுடிகளை நள்ளிரவில் போலீசார் பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டை வீசி சோதனை செய்தவர்கள் யார்? யாரை கொல்ல வெடிகுண்டுகளை தயாரித்தனர் ? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடிகள், அதை ரயில்
தண்டவாளம் அருகில் வீசி சோதித்துப் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: