• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அதிகரிக்கப்பட்ட முதியோர், திருநங்கைகளுக்கான உதவித்தொகையை பயனாளர்களுக்கு வழங்கிய புதுச்சேரி முதல்வர்

அதிகரிக்கப்பட்ட முதியோர், திருநங்கைகளுக்கான உதவித்தொகையை பயனாளர்களுக்கு வழங்கிய புதுச்சேரி முதல்வர்

உதவித் தொகை அதிகரிப்பு

உதவித் தொகை அதிகரிப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள முதியோர்களுக்கான, திருநங்கைகள் ஆகியோருக்கான உயர்த்தப்பட்ட புதிய உதவித் தொகை முதல்வர் ரங்கசாமி பயனாளர்களுக்கு வழங்கினார்.

  • Share this:
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றி பெற்று  முதலமைச்சராக ரங்கசாமி கடந்த மே 7ம் தேதி பதவியேற்றார். அன்றைய தினம் புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் மூலம் வழங்கப்படும் முதியார், விதவை, முதிர்கன்னி, திருநங்கை, கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை கூடுதலாக ரூ.500 உயர்த்தி வழங்கிடும் கோப்பிலும், 10 ஆயிரம் புதிய பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் கோப்பிலும்  அவர் கையொப்பமிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உயர்த்தப்பட்ட ரூ.500 கூடுதல் உதவித்தொகை ஆகஸ்ட் மாதம் அனைத்து பயனாளிகளுக்கும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. 18 வயது முதல் 59 வயது வரை உள்ள பயனாளிகளுக்கு ரூ. 1,500லிருந்து ரூ.2 ஆயிரமாகவும், 60 முதல் 79 வயது வரை உள்ள முதியோருக்கு ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.2,500 ஆகவும், 80 வயதை கடந்தவர்களுக்கு ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.3,500 ஆகவும் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘சமையல் எரிவாயு விலை 10 மாதங்களில் 41 சதவீதம் உயர்வு’ - சு.வெங்கடேசன் கண்டனம்!


இத்திட்டத்தின் மூலம் தற்போது 1,54,847 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.ஆகஸ்ட் மாதம் முதல் புதிதாக 10 ஆயிரம் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதனால் 1,64,847 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க: கஞ்சா தோட்டம் போட்டு கோடீஸ்வரனாக திட்டம் போட்ட வாலிபர் - நண்பரால் சிக்கிய பரிதாபம்!


இதற்கான முதல்கட்டமாக தட்டாஞ்சாவடி, இந்திராநகர் தொகுதியை சேர்ந்த புதிய பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகையுடன் கூடிய புதிய உதவித்தொகை பெறும் ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் உள்ள அவரின் அலுவலகத்தில் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முதலமைச்சர், மாற்றுத்திறனாளிகள் மற்றும்  மீனவ சமுதாயத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையுடன் ரூ.500 கூடுதலாக வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: