220 கோடி ரூபாயில் புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை!

புதுச்சேரிக்கு புதிய சட்டப்பேரவை

புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை 220 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட இருப்பதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்டுவது தொடர்பாக மக்களவை தலைவர் ஆம் பிர்லாவுடன் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கலந்துரையாடினார்.

    புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் காணொலி மூலமாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுடன் இன்று கலந்துரையாடினார்.அப்போது 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கட்டிடமான புதுச்சேரி சட்டபேரவைக்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டன. சட்டப்பேரவை செயலர் முனிசாமி, பேரவைத்தலைவரின் தனிச்செயலர் தயாளன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

    இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் செல்வம், ரூ. 220 கோடியில் புதிய சட்டப்பேரவை வளாகம் தட்டாஞ்சாவடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்படும். இப்பணி 16 மாதங்களில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம். அதையடுத்து சட்டப்பேரவை புதிய இடத்துக்கு மாறும். இதற்கான அனுமதி தொடர்பாக காணொலியில் கலந்துரையாடினோம்" என்று தெரிவித்தார்.

    புதுச்சேரி கடற்கரை சாலை பாரதி பூங்கா அருகில் பிரெஞ்சு ஆட்சியர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில்  சட்டப்பேரவை இயங்கி வருகிறது. சட்டப்பேரவை மைய மண்டபம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கட்டிடமாகும். அதனை சுற்றி புதிதாக கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மைய மண்டபம் செயல்படும் கட்டிடத்திற்கு பின்புறம் கடந்த 2006 ம் ஆண்டு 3 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன் மேல் உள்ள மாடியில் குடிநீர் தொட்டிகள் பில்லர் அமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.பழைய கட்டடம் இருமுறை சேதமாகி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இடப்பற்றாக்குறை உள்ளதால் முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலர்கள் சட்டமன்ற வளாகத்திற்குள் வாகனங்களில் வந்து செல்வதும் மிகவும் சிரமம் ஏற்பட்டது. இவைகளை கருத்தில் கொண்டே கடந்த என்.ஆர்.காங்கிரஸ் கால ஆட்சியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் புதிய சட்டப்பேரவை கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக இரு சாலைகள் கொண்ட பகுதியில் நிலமும் கையகப்படுத்தப்பட்டது.

    புதிய சட்டப்பேரவை கட்டும் திட்டம் பொலிவுறு நகர திட்டத்திலும் சேர்க்கப்பட்டது. மத்திய அரசும் நாடாளுமன்றத்தின் மூலம் அனைத்து மாநிலங்களிலும் புதிய சட்டமன்ற வளாகம் கட்டுவதற்கு நிதி தரவும் முன்வந்துள்ளது.  ஆனால் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டும் திட்டத்திற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு செய்து முடிக்கப்படவில்லை. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் முதலில் அந்த திட்டத்தை கடந்த காங்கிரஸ் அரசும் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தது. ஆனால் ஆட்சியின்கடைசி ஆண்டில்புதிய சட்டப்பேரவை கட்டும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. அதில் கூடுதல் விவரங்களை கேட்டிருந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து புதிய சட்டமன்ற பணிகள் வேகமெடுத்துள்ளன.

     

    செய்தியாளர்:இளவமுதன்
    Published by:Murugesh M
    First published: