• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் கிரேன் விழுந்து தொழிலாளி பலி... கலவரத்தில் முடிந்த போலீஸ் தடியடி!

புதுச்சேரியில் கிரேன் விழுந்து தொழிலாளி பலி... கலவரத்தில் முடிந்த போலீஸ் தடியடி!

வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

தனியார் தொழிற்சாலையில் கிரேன் விழுந்து மேற்கு வங்க மாநில தொழிலாளி பலியானார்.இதனால் எழுந்த கலவரத்தில் தொழிற்சாலை பொருட்கள்,வாகனங்கள்,போலீஸ் ஜீப் ஆகியவை அடித்து நொருக்கப்பட்டன.

  • Share this:
புதுச்சேரியில் கிரேன் விழுந்து மேற்கு வங்க மாநில தொழிலாளி உயிரிழந்தார். இதனை கண்டித்து சக தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தடியடி நடத்தியதால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் போலீஸ் ஜீப் உள்ளிட்ட வாகனங்களை சூரையாடினர்.

புதுச்சேரி சேதராப்பட்டு கரசூர் சாலையில் GANGENS International என்ற தனியார் இரும்பு  தொழிற்சாலை  இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வந்த  மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஜிகர் மாலிக்(23)  கிரேன் விழுந்து பலியானார். இதனை கண்டித்து சக தொழிலாளர் உடலை தரமறுத்து மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தொழிலாளிகளிடம் பேச்சு நடத்தினர்.  மறியலை கைவிட தொழிலாளர்கள் மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால்ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் போலீஸ் ஜீப்பை கவிழ்த்து அடித்து நொறுக்கினார்கள்.மேலும் தொழிற்சாலையில் இருந்த பொருட்கள்  மற்றும் வாகனங்களை சூறையாடினார்கள்.

இந்த கலவரத்தில் சப் இன்ஸ்பெக்டர் முருகன் உட்பட 3 போலீசார்,5 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதன் பிறகு இறந்த தொழிலாளியின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம்  குறித்து சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்பகுதியில் .பதற்றமான சூழல் நிலவுவதால்  கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விளக்கேற்றி, ஒலி எழுப்பினால் கொரோனா ஒழிந்திடுமா என்றார்கள், ஆனால்.. பிரதமர் மோடி உரை


இது குறித்து தொழிலாளர்கள் தரப்பில் கேட்டபோது,இந்த தொழிற்சாலையில் இந்தி மொழி பேசும் தொழிலாளர்கள் 5000 பேர் பணியாற்றுகின்றனர்.இதில் யாராவது இறந்தால் மூட்டை கட்டி அனுப்பி விடுகின்றனர்.புதுச்சேரியில் புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தவில்லை.இதன் வெளிப்பாடு தான் இன்றைய கலவரம்.



உரிய நியாயம் மற்றும் நிவாரணம் கேட்டு போராடிய தொழிலாளர்களை அடித்து உதைத்து போலீசார் தலைமறைவாக்கி விட்டனர். 12 மணி நேரம் பணியாற்றும் தொழிலாளர் நலன் பாதுகாக்கப்படவில்லை.மாறாக போலீஸ் துணையுடன் அடக்குமுறை கையாளப்படுகிறது.புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்துவதே இதற்கு ஒரே தீர்வு என்று கூறினர்.

மேலும் படிங்க: இளம்பெண் கொலையில் 17வயது சிறுவன் கைது- போலீஸாரிடம் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: