Home /News /national /

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை நிறுத்தம்

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை நிறுத்தம்

ஜிப்மர் மருத்துவமனை

ஜிப்மர் மருத்துவமனை

ஜிப்மர் மருத்துவரிடம் ஆலோசனை பெற விரும்பும் நோயாளிகள், www.jipmer.edu.in என்ற ஜிப்மர் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணுக்கு தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.

கொரோனா அதிகரிப்பு காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 18-ம் தேதி முதல் வெளிப்புற சிகிச்சை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தொலைபேசி மற்றும் இணையதளம் மூலம் மட்டுமே மருத்துவ ஆலோசனை சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஜிப்மர் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரியில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு ஆலோசனைக்காக வரும் கொரோனா அல்லாத நோயாளிகளுக்கு கொரோனா பரவும் அபாயத்தைக் குறைக்க வகையில் வரும் ஜன. 18 முதல் தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜிப்மர் மருத்துவரிடம் ஆலோசனை பெற விரும்பும் நோயாளிகள், www.jipmer.edu.in என்ற ஜிப்மர் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணுக்கு தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் வரும் 19-ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு துறைக்கும் 50 நோயாளிகள் நேரடி வருகைக்கு அனுமதிக்கப்பட்டு வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு துறையும் முன்பதிவின் அடிப்படையில் மட்டுமே செயல்படும்.

மேலும் சமூகத்திலும், மருத்துவமனையிலும் கொரோனா பரவும் அபாயத்தை குறைக்க ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்கு முன்னெச்சரிக்கையுடன் சிகிச்சை அளிக்கப்படும் என்றும்,நோயாளிகளும் அவர்களது உதவியாளர்களும் ஏற்கனவே தடுப்பூசி போடவில்லை என்றால், கொரோனாவுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஏனெனில் தடுப்பூசி ஒமைக்ரான் வகை மாறுபாட்டுக்கு எதிராகக்கூட பாதுகாப்பை அளிக்கிறது. அனைத்து அவசர மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவுகளும் வழக்கம் போல் இயங்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பார்க்கிங் கட்டணம் வசூலிக்க மால்களுக்கு உரிமையில்லை: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி


Published by:Murugesh M
First published:

Tags: Corona, JIPMER, Pudhucherry

அடுத்த செய்தி