புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனா மேலாண்மைக் குழுவின் 19 வது உயர்நிலைசீராய்வுக் கூட்டம் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஹைதராபாத்தில் இருந்து காணொலி மூலமாக கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். தலைமைச் செயலர் அஷ்வனிகுமார், போலீஸ் டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா, வருவாய்த்துறைச் செயலர் அசோக் குமார், சுகாதாரத்துறைச் செயலர் அருண் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
புதுச்சேரியில் தற்போதைய கொரோனா நிலவரம், தடுப்பூசி மற்றும் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகள் குறித்து படக்காட்சி மூலம் சுகாதார இயக்குநர் விளக்கினார். பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை முறைப்படுத்துவது, ஊரடங்குக் கட்டுபாடுகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது, தடுப்பூசிப் போடுவதை தீவிரப்படுத்துவது, கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவது ஆகிய கருத்துக்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
கூட்டத்தில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ‘கொரோனா பரிசோதனைகளை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும். பரிசோதனை முறைகளில் மாற்றம் வேண்டும். தொற்று பாதிப்புகள், அறிகுறிகள் அதிகம் காணப்படும் பகுதிகளில் பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்.எந்த நேரத்திலும் மூன்றாவது அலை தாக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கும் நிலையில் தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த மற்றுமொரு தடுப்பூசித் திருவிழாவை நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
மேலும், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் தடுப்பூசி செலுத்தியாக வேண்டும் என்றும் வணிக நிறுவனங்களை முழு அளவில் திறப்பதற்கான கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக, வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான விழிப்புணர்வையும், எச்சரிக்கையையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் பேசினார்.
இதையும் படிங்க: ‘பெட்ரோல் போட கடன் கொடுங்க’: வங்கி மேலாளரிடம் மனு!
கொரோனா இரண்டாவது அலை இன்னும் முழுமையாக முடியாத நிலையில் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஆகஸ்டு 15 க்குள் 100 சதவீதம் தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கொரோனா பரவல் குறைந்துள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி மருத்துவமனைகளின் உள்கட்டமைப்புகளை சீரமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.
மேலும் படிக்க: கூட்டுறவு சங்கத்தில் மோசடி: தப்பிப்பதற்காக அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய நபர்!
மேலும், “மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளிக்க வேண்டும்.இரண்டாவது அலையின் போது நாம் எதிர்கொண்ட சிக்கல்களை அடையாளம் கண்டு சரி செய்ய வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மருத்துவ மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருப்பதால் அவர்களை சேவையில் ஈடுபடுத்தும் வகையில் கொரோனா மேலாண்மை குறித்த கல்வி பயிற்சிகளை அளிக்க வேண்டும்’ என ஆளுநர் தமிழிசை கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pudhucherry, Tamilisai Soundararajan, Vaccination, West Bengal Assembly Election 2021