‘மக்கள் தொகை கட்டுப்பாடு.. இருபாலாருக்கும் பங்கு உண்டு’- தமிழிசை அறிவுறுத்தல்

தமிழிசை

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் ஆண்-பெண்இருபாலாருக்கும் பங்கு உண்டு என துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தல்.

  • Share this:
    மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் உலகளாவிய பிரச்சைனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ஆம்தேதி உலக மக்கள் தொகை நாள் கடைபிடிக்கப்பட்ட வருகிறது. அதனை ஒட்டிபுதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள்தொகை தின விழா-2021 இன்று இலாசுப்பேட்டை குறிஞ்சி நகர் மனமகிழ்மன்றத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டு, "நெருக்கடியான சூழலிலும் குடும்பத்திற்கும் நாட்டின் தற்சார்பிற்குமான குடும்பக் கட்டுப்பாட்டுச் சேவைகளை வழங்குதல்" குறித்து உரையாற்றினார்.

    விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர்,நமது நாட்டில் மக்கள் தொகை 130 கோடிக்கும் மேல் இருக்கிறது, மக்கள் தொகை அதிகமாக இருந்தால் மனித வளமும் அதிகமாக இருக்கும். அதே சமயம் வளங்கள் அனைத்தையும் பகிர்ந்து அளிக்க வேண்டும். நாட்டை வளப்படுத்த வேண்டும்என்றால், மக்கள் அனைவரும் பசியின்றி முன்னேற்றத்துடன் வாழ வேண்டும் என்றால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

    மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் எண்ணம் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் ஆண்-பெண் இருபாலாருக்கும் பங்கு உண்டு. குடும்பக் கட்டுப்பாடு என்று கூறுவதைவிட குடும்பத் திட்டமிடல் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். திட்டமிட்டகுடும்பத்தை உருவாக்க வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

    இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான குழந்தைகளே நாட்டின் செல்வங்கள்.இன்றைய விஞ்ஞான உலகில் மக்கள்தொகை கட்டுப்படுத்துவதற்கு எளியமுறைகள் இருக்கின்றன. இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படவேண்டும்.கொரோனா காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் அச்சத்துடன் இருந்தார்கள். அதனைபோக்க மத்திய அரசு கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போட அனுமதிவழங்கியிருக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்கும் இதனைத்தெரியப்படுத்த வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    குழந்தைகளை பாரபட்சமின்றி வளர்க்க வேண்டும். ஆண்-பெண் இருபாலாருக்கும் அரவணைப்பு, கல்வி அனைத்தையும் சமமாக வழங்கி வேண்டும். பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடல்களைப் பாடிய பாரதியும் பாரதிதாசனும் வாழ்ந்த மண் புதுச்சேரி. மக்களின் பொருளாதாரம் மிகவும் முக்கியம்.

    மக்களின் வாழ்வாதாரத்தைக்கருத்தில் கொண்டு கொரோனா காலத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பெண்கள் தங்கள் கணவர் குழந்தைகள் மீது அக்கறை செலுத்துவது போலவே தங்களது நலனிலும் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். ஆண்கள் பெண்களுக்குத் துணையாக இருக்கவேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். புதுச்சேரியை பாதுகாப்பான மாநிலமாக மற்ற வேண்டும் என்றும் தமிழிசை கேட்டு கொண்டார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: