• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மீண்டும் வருகிறது"பாண்டிச்சேரி மினரல் வாட்டர்"

மீண்டும் வருகிறது"பாண்டிச்சேரி மினரல் வாட்டர்"

குடிநீர்

குடிநீர்

ஜனாதிபதி மாளிகைக்கு பாசிக் மினரல் வாட்டர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பிரான்ஸ் போன்ற வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. தனியார் நிறுவனங்களின் போட்டியால் பாண்டிச்சேரி மினரல் வாட்டருக்கான வரவேற்பு சரிந்தது.

  • Share this:
புதுச்சேரி ஒன்றிய அரசு மீண்டும் குடிநீர் விற்பனையை  தொடங்க முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முதல்கட்டமாக,  சட்டமன்ற வளாகத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அலுவலகங்களில் இந்த குடிநீரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிஅரசு சார்பு நிறுவனமான பாசிக் ((PASIC) எனப்படும் வேளாண் பொருட்கள் உற்பத்தி நிறுவனம்  1990ம் ஆண்டு மினரல் வாட்டர் உற்பத்தியை தொடங்கியது."பாண்டிச்சேரி மினரல் வாட்டர்" என்ற பெயரில் 300மில்லி , 500மில்லி, ஒரு லிட்டர், ஒன்றரை லிட்டர், 2 லிட்டர் கொள்ளளவில் விற்பனை செய்தது. தனித்துவ சுவை கொண்ட இந்த குடிநீருக்கு புதுச்சேரி மட்டுமின்றி தமிழகம், கேரளா, கர்நாடாகா போன்ற வெளிமாநிலங்களிலும் அமோக வரவேற்பு இருந்தது.

டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு பாசிக் மினரல் வாட்டர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பிரான்ஸ் போன்ற வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. நவீன தொழில்நுட்பமான ஆர்ஓ சிஸ்டம் வந்த பிறகு தனியார் நிறுவனங்களின் போட்டியால் பாண்டிச்சேரி மினரல் வாட்டருக்கான வரவேற்பு சரிந்தது.மேலும் அதிகப்படியான ஆட்கள் நியமனத்தால் பாசிக் நிறுவனம் கடுமையான நஷ்டத்திற்கு தள்ளப்பட்டது.இதனால் 2017ம் ஆண்டு மினரல் வாட்டர் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் விற்பனையை தொடங்க புதிய அரசு நடவடிக்கையை எடுத்தது. இதற்கு பாசிக் நிறுவனம் திட்டமிட்டு பூர்வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. உற்பத்திக்கான இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. 2 லிட்டர் ரூ.30, ஒன்றரை லிட்டர் ரூ.25, ஒருலிட்டர் ரூ.20, 500 மி.லி ரூ.11, 300 மி.லி ரூ.6 என பழைய விலையிலேயே இப்போதும் விற்பனை செய்ய பாசிக் திட்டமிட்டுள்ளது.



முதல்கட்ட தண்ணீர் தயாரிப்பு பணி வேகமாக நடந்து வருகிறது. இதன் முதல்படியாக சட்டமன்ற வளாகத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அலுவலகங்களில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை சட்டமன்ற வளாகத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் முன்னிலையில் முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

இதையும் படிங்க: ஆன்லைன் கிராமங்கள், 2 லட்சம் கி.மீ. தேசிய நெடுஞ்சாலை: கதி சக்தி திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: