• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி: 25 பேருக்கு மேல் பங்கேற்க தடை!

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி: 25 பேருக்கு மேல் பங்கேற்க தடை!

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

புதுச்சேரியில் விநாயகர் சிலை வைக்கப்படும் இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளுடன் 25 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • Share this:
    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது மற்றும் பொது இடங்களில் சிலை வைப்பது தொடர்பாக, வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 10ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதை பின்பற்றி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்கள் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து கொண்டாட அனுமதி மறுத்துள்ளது.

    அதேவேளையில், புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட எந்தத் தடையும் இல்லை என புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.

    அதன்படி,  புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை வைக்கப்படும் இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளுடன் 25 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பெண்கள் முன்னேற்றத்தில் அடுத்த மைல் கல்: என்.டி.ஏ.வில் பெண்களை அனுமதிக்க மத்திய அரசு முடிவு!



    விநாயகர் சிலை வைப்பதற்கான இடங்களுக்கு போலீஸ் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் விநாயகர் சிலைகளை கரைக்க வாகனங்களில் எடுத்து செல்லலாம் , ஆனால் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்படுவதாகவும்  புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: