பெரிய விமானங்கள் வந்துசெல்லும் வகையில் புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஓடுதளத்தின் நீளத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இங்கிருந்து முதல் விமானம் பெங்களூருவுக்கு இயக்கப்பட்டது. போதிய வரவேற்பு இல்லாததால் விமான சேவை நிறுத்தப் பட்டது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதும் சிறு நகரங்களை வான் வழியாக இணைக்கும் உதான் திட்டத்தை அறிவித்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதுச்சேரி- ஐதராபாத் இடையே விமான சேவையை தொடங்கியது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து விமான சேவை நிறுத்தப்பட்டது.
பெரியரக விமானங்கள் வ ந்தால்தான் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வர ஏதுவாக இருக்கும்.
இப்போது உள்ள ஓடுதளம் ஆயிரத்து 500மீட்டர் நீளத்துக்கு மட்டுமே உள்ளது. பெரியரக விமானங்கள் வந்து செல்ல 2 ஆயிரத்து 500 மீட்டர் நீள ஓடுதளம் தேவை. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் இனி பெட் பாட்டிலில் சாராயம்... குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஏற்பாடு..
பெரிய ரக விமானம் வர கூடுதலாக ஆயிரம் மீட்டர் ஓடுதளம் அமைக்க 212 ஏக்கர் நிலம் தேவைப் படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக விமான நிலையத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதியான மொரட்டாண்டி, ஆரோவில் பகுதிகளில் நில ஆர்ஜிதம் செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். துணைநிலை ஆளுநர் தமிழிசை சமீபத்தில் தமிழக முதல்அமைச்சர் ஸ்டாலினை சந்தித்து விமான நிலையத்துக்கு தமிழக பகுதியிலிருந்து நிலம் கையகப்படுத்தி தர கோரிக்கை வைத்தார்.
மேலும் கடந்த 24ம் தேதி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை போனில் தொடர்புகொண்டு பேசினார்.
இதையும் படிக்க: திருச்சி ஐஐஐடியில் புதிய பாடப்பிரிவுகள்: இயக்குநர் தகவல்!
இதன் தொடர்ச்சியாக விமான நிலைய விரிவாக்கத்துக்கு கூடுதல் இடம் கையகப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் லட்சுமிநாராயணன், விமான நிலை இயக்குனர் விஜய் உபாத்யா, சுற்றுலாத்துறை செயலர் விக்ராந்த்ராஜா, இயக்குனர் பிரியதர்ஷினி மற்றும் அதிகாரிகள் தமிழக பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் படிக்க: குடிபோதையில் கோஷ்டி மோதல்.. ஒருவர் அடித்து கொலை!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் லட்சுமிநாராயணன், ‘விமான நிலைய ஓடுதளத்தை விரிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக 104 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்ய திட்டமிட்டுள்ளோம். விழுப்புரம் ஆட்சியர், எம்பியை அழைத்து பேச உள்ளோம். 2ம் கட்டமாக கூடுதலாக 217 ஏக்கர் நிலம் கேட்க உள்ளோம். தற்போதை ஓடுதளம் 1,500 மீட்டர் நீளம் மட்டுமே உள்ளநிலையில், அதனை 3 ஆயிரத்து 330 மீட்டர் ஓடுதளமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.
உங்கள் நகரத்திலிருந்து(Puducherry)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.