• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ‘பெட்ரோல் போட கடன் கொடுங்க’: வங்கி மேலாளரிடம் மனு!

‘பெட்ரோல் போட கடன் கொடுங்க’: வங்கி மேலாளரிடம் மனு!

புதுச்சேரி

புதுச்சேரி

பெட்ரோல் விலை என்பது இரண்டு மடங்கு உயர்ந்து இன்று ரூபாய் 100க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. வேலை இல்லாத இளைஞர்கள் வேலை தேடுவதற்கு தங்களது இருசக்கர வாகனத்தில் எரிபொருள் நிரப்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது.

  • Share this:
புதுச்சேரியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்,  எரிபொருள் கடன் கேட்டு வங்கியில்  மனு அளித்தனர்.

புதுச்சேரியில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100ரூபாபை தாண்டி விட்டது. இதனை கண்டித்து காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் போன்ற அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வல அமைப்புகளும் போராட்டத்தை நடத்தி  வருகின்றன.இதில்  DYFI எனப்படும்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் லாசுப்பேட்டை இந்தியன் வங்கி கிளை முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,  வேலை கிடைக்கும் வரை பெட்ரோல் செலவிற்கு கடன் கேட்டுஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் வங்கியின் கிளை மேலாளரிடம் பெட்ரோல் செலவிற்கு கடன் கேட்டு மனு அளித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கொரோனா பெருந்தொற்றினால் எண்ணற்ற மக்களின் வேலை வாய்ப்பு பறிபோயுள்ளது.ஏற்கனவே வேலைவாய்ப்பில் பஞ்சம் நிறைந்த இந்திய நாட்டில் 70% சதவீத படித்து முடித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.புதுச்சேரியில் ஆண்டுக்கு சராசரியாக 10,000 மாணவர்கள்  தங்களது உயர்கல்வியை முடித்து வெளியேறுகின்றனர்.

ஆனால் இதில் 90 % இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு இல்லை என்பதே நிதர்சனம்.இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக பெட்ரோல் விலை என்பது இரண்டு மடங்கு உயர்ந்து இன்று ரூபாய் 100க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. வேலை இல்லாத இளைஞர்கள் வேலை தேடுவதற்கு தங்களது இருசக்கர வாகனத்தில் எரிபொருள் நிரப்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மேலும் படிக்க: பெட்ரோல் விலை உயர்வு: புதுச்சேரியில் ஆட்டோக்களை கயிறு கட்டி இழுத்து போராட்டம்...


அதுமட்டுமின்றி இருசக்கர வாகனத்தை ஆதாரமாக கொண்டு வேலை செய்யும் உணவு விநியோகம் செய்யும் இளைஞர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்தில் 70 சதவீதத்தை எரிபொருளுக்கு செலவு செய்யும் கொடூரம் அரங்கேறி வருகிறது. எனவே,  பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்துள்ளதால் அதை வாங்குவதற்கு லோன் வழங்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டதாக தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: