விவசாயிகளை தேடி சென்று கொரோனா தடுப்பூசி: அசத்தும் புதுச்சேரி அரசு!

தடுப்பூசி முகாம்

புதுச்சேரி கிராமப் பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை தேடிச்சென்று கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

  • Share this:
புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதையடுத்து விவசாயிகளை தேடி சென்று மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்று குறைந்து வருகிறது. நேற்று 4214 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 81 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 81 பேரில் புதுச்சேரியில் 63 பேரும், காரைக்காலில் 6 பேரும், ஏனாமில் ஒருவரும், மாகியில் 11 பேரும் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  171 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 85 பேர், கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் 54 பேர், கோவிட் கேர் சென்டர்களில் 24 பேர் என  246 பேர் மருத்துவமனையிலும், 1167 பேர் வீட்டு தனிமையிலும் என 1413 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் இதுவரை  1771 பேர் உயிரிழந்துள்ளனர். 5லட்சத்து 93 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் 100% தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நீட் தேர்வு தேதி அறிவிப்பு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!


இதன் ஒரு பகுதியாக விவசாயிகளை தேடி சென்று தடுப்பூசி போடும் முகாம் இன்று துவங்கியது. சந்தை புதுகுப்பம் பகுதியில் 100 நாள் வேலை செய்துவரும் விவசாயிகளுக்கு காட்டேரிக்குப்பம் சுகாதார நிலைய மருத்துவர்கள்  தடுப்பூசி  செலுத்தினார். 200க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர் . இது குறித்து காட்டேரிக்குப்பம் சுகாதார நிலைய மருத்துவர் விக்னேஷ் கூறுகையில், அனைவரும் தடுப்பூசியை  செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 
Published by:Murugesh M
First published: