பிரதமரின் அறிவுரைகள் போதும், அவர் செயல்பாட்டில் இறங்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்..!

பொருளாதாரத்தை சீரமைக்க என்ன நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க இருக்கிறது என பிரதமர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்

பிரதமரின் அறிவுரைகள் போதும், அவர் செயல்பாட்டில் இறங்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்..!
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
  • Share this:
பிரதமர் நோய் தடுப்பு அறிவுரை கூறினார். இனி செயல்பாடுதான் முக்கியம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள்,  ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மின் விளக்குகள் மட்டும் அனைத்து விட்டு,   தீபம்,  மெழுகு வர்த்த்தி ஏந்த பிரதமர் மோடி வேண்டுகோள்  விடுத்திருந்தார். இதன்படி முதல்வர் நாராயணசாமி தனது இல்லத்தின் பால்கனியில் கையில் விளக்கேற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், பிரதமரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? 14-ஆம் தேதிக்கு பிறகு கொரோனா இருந்தால் பிரதமர் என்ன செய்ய போகிறார் என கேள்வி எழுப்பினார். பொருளாதாரத்தைச் சீரமைக்க பிரதமர் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா குறித்து நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களுடன் பேசுவதை விட பொருளாதார மேதைகளுடன் கலந்து பேச வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தினார்.


இதுவரை பிரதமர் நோய் தடுப்புக்கு அறிவுரைகள் கூறினார். இனி செயல்பாடுதான் முக்கியம். சமூக இடைவெளிக்கு ஊரடங்கு உத்தரவு தேவை. ஆனால் கைதட்டுவதால் விளக்கேற்றுவதால் கொரோனா போகாது. மக்களைகாக்கும் பொறுப்பை பிரதமர் தட்டி கழிக்க கூடாது. மாநிலங்கள் நிதியில்லாமல் தவிக்கின்றன. மத்திய அரசு நிதி தர வேண்டும். புதுச்சேரி க்கு 900 கோடி ரூபாய் கேட்டும் மத்திய அரசு பதிலே சொல்லவில்லை என்றும் முதல்வர் நாராயணசாமி புகார் கூறினார்.

மருத்துவ உபகரணங்கள் கிடைக்காமல் மாநிலங்கள் அவதிபெறும் நிலையில் விளக்கேற்றுவதும் மணி அடிப்பதும் பலன் தராது, எதிர்கட்சிகளின் கூட்டத்தில் கருத்துக்கள் கிடைத்தாலும் பொருளாதார மேதைகளை அழைத்து பேசினால்தான் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் எனவும் நாராயணசாமி தெரிவித்தார்.

பொருளாதாரத்தை சீரமைக்க என்ன நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க இருக்கிறது என பிரதமர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும், எப்படி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற புரிதல் மக்களுக்கு ஏற்பட்டு விட்டது. அதனால் அறிவுரைகளை தாண்டி கொரோனா தாக்கத்தில் இருந்து வெளி வர மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் நாராயணசாமி வலியுறுத்தினார்.

 
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading