• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சாலையில் திடீரென பற்றி எரிந்த கார்: புதுச்சேரியில் பரபரப்பு!

சாலையில் திடீரென பற்றி எரிந்த கார்: புதுச்சேரியில் பரபரப்பு!

பற்றி எரிந்த கார்

பற்றி எரிந்த கார்

காரில் இருந்து புகை வருவது நிற்காததால், அச்சமடைந்த குல், நாவற்குளம் அரசு பள்ளி-மாரியம்மன் கோவில் அருகில் அதனை நிறுத்தியுள்ளார். பின்னர் குல் மற்றும் அவரது மகள் காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் தள்ளிப் போய் நின்றுள்ளனர். 

  • Share this:
புதுச்சேரியில் சாலையில் திடீரென் கார் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் சில நிமிடங்களுக்கு முன்பே அதில் இருந்து இறங்கியதால் உயிர் தப்பினர்.

லாஸ்பேட்டை நாவற்குளம் ரத்தினவேல் நகரைச் சேர்ந்தவர் குல்(54). காலாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில்  இவர் பணியாற்றி வருகிறார். குல்  தனது உறவினரின்  டாடா இண்டிகா காரை தனது மகளுடன் கடைக்கு ஓட்டி சென்றார்.   சிறிது தூரம் சென்றதும் காரின் எஞ்சினில் இருந்து புகை வரத் தொடங்கியது.

காரில் இருந்து புகை வருவது நிற்காததால், அச்சமடைந்த குல், நாவற்குளம் அரசு பள்ளி-மாரியம்மன் கோவில் அருகில் அதனை நிறுத்தியுள்ளார். பின்னர் குல் மற்றும் அவரது மகள் காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் தள்ளிப் போய் நின்றுள்ளனர்.

அடுத்த சில நிமிடங்களில் கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.  இதுகுறித்து தகவலறிந்து கோரிமேடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து  தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுமையாக எரிந்தது. இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தீப்பிடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே  காரில் இருந்து தந்தை-மகள்  ஆகியோர் இறங்கி தூரம் சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். கார் தீப்பற்றி எரிந்த காட்சியை அங்கிருந்த சில வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: