பிரதமர் மோடியை சந்தித்து புதுச்சேரி பாஜக அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து!

பிரதமரிடம் வாழ்த்து

பிரதமர் இல்லத்தில் தன்னை சந்தித்த  அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி,  புதுச்சேரியில் முதல்முறை பாஜகவின் சபாநாயகராக பதவி ஏற்றுள்ள செல்வத்தையும் பாராட்டி கவுரவித்தார்.

  • Share this:
புதுச்சேரி பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி வைத்து 9 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது.இதில், 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அக்கட்சியைச் சேர்ந்த ஏம்பலம்  செல்வம் புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். நமச்சிவாயம், சாய்சரவணக்குமார் ஆகியோர் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 3 பாஜகவினர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதுச்சேரி அமைச்சரவையில் பாஜக இடம் பெற்றுள்ளது இதுவே முதன்முறையாகும். இதனையொட்டி,  பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர்  அமித் ஷாமற்றும் மத்திய அமைச்சர்களை புதுச்சேரி மாநில பாஜக அமைச்சர்கள் நமச்சிவாயம்,சாய் சரவணன் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள், ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள்,நியமன எம்எல்ஏக்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பிரதமர் இல்லத்தில் தன்னை சந்தித்த  அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி,  புதுச்சேரியில் முதல்முறை பாஜகவின் சபாநாயகராக பதவி ஏற்றுள்ள செல்வத்தையும் பாராட்டி கவுரவித்தார்.பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான மேக்வால் ஆகியோர் இந்த சந்திப்புகளில் இருந்தனர். புதுச்சேரி ஆட்சியில் துறைகள் ஒதுக்கீடு,உள்ளாட்சி தேர்தல் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

செய்தியாளர்: இளவமுதன்
Published by:Murugesh M
First published: