• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ‘கடல் ரொம்ப குப்பை ஆயிடிச்சு’- ஆழ்கடலை சுத்தம் செய்யும் 8 வயது சிறுமி!

‘கடல் ரொம்ப குப்பை ஆயிடிச்சு’- ஆழ்கடலை சுத்தம் செய்யும் 8 வயது சிறுமி!

தாரகை ஆரண்ணா

தாரகை ஆரண்ணா

புதுச்சேரியின்ஆழ்கடலில் தூய்மை செய்யும் 8 வயது சிறுமியின் குறும்படம் வைரலாகி வருகிறது.

  • Share this:
புதுச்சேரியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் ஆழ்கடலை சுத்தம் செய்யும் அரியப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

புதுச்சேரியை சேர்ந்தவர் ஆழ்கடல் நீச்சல் வீரரான அரவிந்த். சென்னை மற்றும் புதுச்சேரியில் பயிற்சி பள்ளி நடத்தும் இவர் உரிய பயிற்சிகளுடன் ஆழ்கடலுக்குள்  சுற்றுலா பயணிகளையும் வீரர்களையும் அழைத்து செல்கிறார். 20 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கொரோனா, கடல் தூய்மை, யோகா, உடல் ஆரோக்கியம் போன்றவை தொடர்பான  விழிப்புணர்வு நிகழ்வை ஆழ்கடலில் செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரது 8 வயது மகள் தாரகை ஆரண்ணா மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட ஆழ்கடலில் தூய்மை பணி  செய்கிறார்.இதனை ஒரு குறும்படமாக அவரது தந்தையான  ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் உலக இயற்கை பாதுகாப்பு நாளன்று வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் இந்த குறும்படம் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: மருத்துவப் படிப்பில் ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!


தனது  தந்தை ஆழ்கடல் நீச்சல் பயிற்சி கொடுக்கும் போது உடனிருந்து கவனித்து வந்த சிறுமி  தாரகை, கடலின் சூழல் எப்படி பாதிக்கப்படுகிறது, கடலுக்கு அடியில் பிளாஸ்டிக், அறுந்த வலைகள், முக கவசங்கள் போன்றவை இருப்பதையும் அவற்றால் கடல் வாழ் உயிர் இனங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொண்டார்.

கடற்கரை சுத்தம் மற்றும் ஆழ்கடல் தூய்மை போன்றவற்றை அருகில் இருந்து பார்த்த தாராகை தானும் அதில் ஈடுபட விருப்பம் தெரிவித்து முறையான பயிற்சியை பெற்று கடலுக்குள் சென்று பிளாஸ்டிக் கழிவுகளை அள்ளி வருகிறார். மேலும் தினமும் காலையில் தந்தையுடன்  நடைபயிற்சி மற்றும் சைக்கிளிங் செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து குப்பை தொட்டியில் போடுகிறார்.

மேலும் படிக்க: உங்கள் குழந்தைக்கு இன்னும் ஆதார் அட்டை பதிவு செய்யவில்லையா? வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்!




பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் அவை வாய்கால்,ஆறுகள் வழியே கடலுக்குள் அடியில் சென்று கடல்வாழ் உயிரினங்ளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறுகிறார் சிறுமி தாராகை. கடல் வாழ் உயிரினங்களை போல பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உயிரினங்கள் தற்போது இல்லை.அவற்றை பாதுகாக்க நாம் அனைவரும் இணைய வேண்டும்.ஆளுக்கெரு உயிரினத்தை தேர்ந்தெடுத்து அவற்றை பற்றி தெரிந்து கொண்டு அவற்றை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் தாரகை ஆரண்ணா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: