வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 சாமி சிலைகள் மீட்பு: ஐம்பொன் சிலைகளா என ஆய்வு!

சிலைகள் பறிமுதல்

சுரேஷ் வீட்டில் சுமார் 3 அடி உயர நடராஜர், அம்மன் சிலைகள் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். எனினும்,  அவை பித்தளை சிலைகள்தான் என கூறி  சுரேஷ் வீட்டார்  போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

  • Share this:
புதுச்சேரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவை ஐம்பொன்னால் செய்யப்பட்டதா என்பதை அறிய ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். நகராட்சி ஊழியரான சுரேஷின் வீட்டில் சாமி சிலைகள் இருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கதிரவன் தலைமையில் போலீசார் புதுச்சேரி வந்தனர்.

சுரேஷ் வீட்டில் சிலைகள் உள்ளதா என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் சுமார் 3 அடி உயர நடராஜர், அம்மன் சிலைகள் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்



எனினும்,  அவை பித்தளை சிலைகள்தான் என கூறி  சுரேஷ் வீட்டார்  போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த சிலைகளை போலீசாரிடம் தர மறுப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் முத்தியால்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் செய்தனர்.  அதைத்தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த சிலைகளை பறிமுதல் செய்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அவைகளை தமிழகம் எடுத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: கொரோனா தடுப்பூசி போட வீடு வீடாக செல்லும் மருத்துவக் குழு... அலட்சியப்படுத்தும் மக்கள்!


இதுகுறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கதிரவன் நிருபர்களிடம் கூறுகையில்,புதுச்சேரியில் சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுரேஷ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினோம். அங்கு நடராஜர் அம்மன் சிலைகள் கிடைத்தது. இந்த சிலைகள் சுமார் தலா 3 அரை அடி உயரமும் தலா 40 கிலோ எடையும் கொண்டுள்ளன.


மேலும் படிக்க: பெண் மீது ஏறி உட்கார்ந்து தாக்குதல்? வைரல் வீடியோவுக்கு போலீஸ் மறுப்பு!


இந்த சிலைகள் பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்படும். பரிசோதனை முடிவில் அவை  ஐம்பொன் சிலைகளா?  அல்லது பித்தளை சிலைகளா என்பது தெரியவரும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Published by:Murugesh M
First published: