புதுச்சேரியில் - நிலுவையில் உள்ள 54 மாத ஊதியத்தை தரக் கோரி வேளாண் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலுவையில் உள்ள 54 மாதங்களுக்கான ஊதியத்தை தரக் கோரி புதுவையில் வேளாண் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் - நிலுவையில் உள்ள 54 மாத ஊதியத்தை தரக் கோரி வேளாண் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நிலுவையில் உள்ள 54 மாதங்களுக்கான ஊதியத்தை தரக் கோரி வேளாண் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
  • Share this:
புதுச்சேரி ஐய்யங்குட்டிபாளையம் பெருந்தலைவர் காமராசர் வேளாண் அறிவியல் நிலையம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 54 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

மேலும், பல்லாண்டுகளாகப் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாண் ஆராய்ச்சி மைய அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Also read: மூன்று ராணுவ வீரர்களைக் கொண்ட குடும்பத்துக்கு நேர்ந்த கொடூரம் - நகைக்காக இரு பெண்கள் அடித்துக்கொலை


அரசு ஊழியர்களுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்த அடிப்படையில் 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக ஊழியர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதால் ஊழியர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அரசும் நிர்வாகமும் உடனடியாக ஒப்பந்தத்தின்படி நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் ஊழியர்கள் கோரினர். மேலும், எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பணிநிரந்தரம் தொடர்பான உத்தரவை வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading