Home /News /national /

பெரிய பட்ஜெட் படம்... புதுச்சேரி முதல்வரை சந்தித்த போனி கபூர்... பின்னணி இதுதான்!

பெரிய பட்ஜெட் படம்... புதுச்சேரி முதல்வரை சந்தித்த போனி கபூர்... பின்னணி இதுதான்!

 புதுச்சேரி முதல்வரை சந்தித்த போனி கபூர்.

புதுச்சேரி முதல்வரை சந்தித்த போனி கபூர்.

Boney Kapoor | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்தார்.

புதுச்சேரியில் திரைப்படங்கள் எடுப்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை குறைக்க வலியுறுத்தி நடிகர்  விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், இயக்குனர் பாக்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து சினிமா எடுப்பதற்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்தநிலையில் புதுச்சேரியில் பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பதற்கு தயாராக உள்ள  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் புதுச்சேரி வந்திருந்தார். அவர் இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது துணை சபாநாயகர் ராஜவேலு, அவரது துணைவியார் மாலதி ராஜவேலு, ஆகியோர் உடன் இருந்தனர்.

இதன்   பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போனி கபூர்,  புதுச்சேரி பிரெஞ்சு கலாச்சாரத்துடன் உள்ள  மாநிலம் என்பதால்  மிகவும் பிடிக்கும். அதனால் அடிக்கடி  புதுச்சேரிக்கு பாலிவுட் நடிகர்கள் விரும்பி  வருவதாகவும் தற்போது மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

Also Read : தோல்வியை தழுவிய விஜய்யின் சுறா... வசூல் செய்தது எவ்வளவு தெரியுமா?

மேலும்  முதலமைச்சர் ரங்கசாமியுடனான சந்திப்பின் போது பெரிய பட்ஜெட் அளவிலான திரைப்படங்களை புதுச்சேரியில் எடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்கு தேவையான உட் கட்டமைப்புகளை புதுச்சேரியில் உருவாக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி இடம் போனிகபூர் கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vijay R
First published:

Tags: Boney Kapoor, Puducherry

அடுத்த செய்தி