சம்பளம் இல்லாததால் இரு சக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்ட அரசு சார்பு நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி பாரதி வீதியில் பீட்சா உணவகம் கடை நடத்தி வருபவர் சக்திவேல். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த ஞாயிற்றுகிழமை மதியம் தனது இரு சக்கர வாகனத்தை சாவியுடன் கடையின் வெளியே நிறுத்தி விட்டு கடைக்குள் சென்றார். மீண்டும் சாவியை எடுக்க வெளியே வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை காணவில்லை.
இதனைடுத்து அவர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் 55 வயதுமிக்க ஒருவர் வாகனத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது. தொடர்ந்து, அவர் சிசிடிவி காட்சிகளுடன் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமிராவில் பதிவான உருவத்தை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
10ம் வகுப்பு தேர்வில் தோல்வி பயம்.. தந்தையை வெட்டிக் கொன்று நாடகமாடிய மகன்!
அதில், இருசக்கர வாகனத்தை திருடி சென்றது நகர பகுதி கந்தப்பா முதலியார் வீதியை சேர்ந்த ஸ்டாலின் (53) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அரசு சார்பு நிறுவனமான பாசிக்கில் பணிபுரியும் ஸ்டாலின் நீண்ட நாட்களாக சம்பளம் வழங்காத காரணத்தினால் தனது செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் சாவியுடன் இருந்த இரு சக்கர வாகனத்தை திருடியதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.