புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கம்..

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கம்..
புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கம்
  • Share this:
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் பொது போக்குவரத்து புதுச்சேரியில் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னும் புதுச்சேரியில் பேருந்துகளை இயக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன் வரவில்லை. காரணம் பேருந்து இயக்கப்படாத 7 மாத காலத்திற்கு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதில் அரசு முடிவு எடுப்பதில் காலதாமதமானதால் ஒரு மாதங்களாய் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசின் குறைந்த பேருந்துகள் மட்டுமே இயங்கின.

இந்த நிலையில் இரண்டு கால் ஆண்டிற்கான சாலை வரியைத் தள்ளுபடி செய்வதாக புதுச்சேரி அரசு நேற்று வாக்குறுதி அளித்தது.

இதனை ஏற்று தனியார் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. ஆனால் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இன்று இயங்கின.காரணம் 7 மாதங்களாய் பேருந்துகள் இயங்காததால் பழுது நீக்கிய பிறகு படிப்படியாக பேருந்துகள் இயக்கப்படும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க...சொத்துத் தகராறில் இரட்டைக்கொலை.. கைவிரலைக் கடித்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம்.. 4 பேர் கைது.. நடந்தது என்ன?மேலும் சமூக இடை வெளியை கடைபிடிக்க பேருந்து நிலையத்திற்குள் இயங்கும் காய்கறி அங்காடியை  3 நாட்களுக்குள் பழையபடியே நகராட்சி இடத்திற்கு அரசு மாற்றுவதாக உறுதி அளித்துள்ளது. அதன் பிறகே பேருந்து நிலையம் முழு செயல்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading