Puducherry Power Cut : புதுச்சேரியில் இன்று (27-05-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்சாரம்(மாதிரிப் படம்)

பராமரிப்புப் பணி காரணமாக இன்று புதுச்சேரியின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • Share this:
    மரப்பாலம் துணை மின் நிலைய பாதையில் இன்று பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தில்லை நகர், விடுதலை நகர், திருவிக நகர், பாரதிதாசன் நகர், தியாகராய நகர், இந்திரா நகர், பட்டம்மாள் நகர், ரோடியர் மில் சாலை, முத்துப்பிள்ளை நகர், ராமலிங்கபுரம், கடலூர் சாலை, ஜேவிஎஸ் நகர், மறைமலை அடிகள் சாலை, சுப்பையா நகர், தென்னஞ்சாலை, உருளையன்பேட்டை, ஆட்டுப்பட்டி,அவ்வை நகர், நேதாஜி நகர், சூளைமேடு, கைலாஷ் நகர், சூரிய காந்தி நகர், அண்ணா சாலை, பாரதிபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இதுபோல் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஜிப்மர் மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சோனியா காந்தி நகர், ராஜா அண்ணாமலை நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு நகர், சிவானந்தபுரம், தாகூர் நகர், ராஜாஜி நகர், பாக்குமுடையானபேட், முத்துப்பேட்டை, கொட்டு பாளையம், லாஸ்பேட்டை, மகாவீர் நகர், குறிஞ்சி நகர், அவ்வை நகர், அசோக்நகர், விமானதளம் சாலை, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read : தமிழகத்தில் வீடுகளுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

    வில்லியனூர் முதல் மரப்பாலம் வரை மின் பாதையில் சிறப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை ஆனந்தம் நகர், கணபதி நகர், பாலாஜி நகர், அண்ணா நகர், அரும்பார்த்தபுரம், சிவகாமி நகர், கம்பன் நகர், அன்னை நகர், ஜெயா நகர், ராமலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read : மின் கட்டணம் கணக்கீடு : குழப்பம் தேவையில்லை - மின்வாரிய அதிகாரிகள் தகவல்

    இதேபோல் அகரம் மின் பாதையில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வில்லியனூர் பகுதி முழுவதும் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பத்மினி நகர், வசந்த நகர், பாரதி நகர், கண்ணகி நகர், பரசுராமபுரம், பெருமாள்புரம், கிருஷ்ணா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published: