இணையதளத்தில் கைவினைப் பொருட்கள் விற்பனை.. கொரோனா காலத்திலும் சாதிக்கும் பெண்கள்

கைவினைப்பொருட்கள்

ஊரடங்கு காலத்தில் வேலையிழந்த பெண்கள்  கைவினைப் பயிற்சி பெற்று  இணையதளம் மூலம்பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

  • Share this:
கொரோனா நோய் தொற்று காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் இருந்து எப்படி மீள்வது என தெரியாமல் பலரும் திகைத்துள்ள நிலையில் புதுச்சேரியில் ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்கள் நவீனத்திற்கு ஏற்ப முயற்சி எடுத்துள்ளனர்.

புதுச்சேரி சேலியமேடு கிராமத்தில் வாணிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மாணவர்களுக்கு கல்வியுடன் கலைப் பொருட்களை உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் இயற்கையாக கொடுக்கக்கூடிய பயனற்ற  பொருட்களான தேங்காய் நார், தேங்காய் மட்டை, பனை ஓலை போன்ற பொருட்களை கொண்டு பொம்மைகளை இவர்கள் உருவாக்கி வருகின்றனர். இதற்கென ஒரு தனி கலைக்கூடம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

Also Read: Kodaikanal: கொடைக்கானல் செல்ல விருப்பமா? லேட்டஸ்ட் நியூஸ் தெரிஞ்சுக்கோங்க..!

கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடினாலும்ஆசிரியர்கள் வருவதுண்டு.அப்படி வந்த சேலியமேடு கிராமத்தில் அரசு பள்ளியின் கைவினை  ஆசிரியர் உமாபதி  பயனற்ற பொருட்களை கொண்டு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை அப்பகுதி பெண்கள் கற்றுக்கொடுத்தார். அதன் விளைவாக அவர்கள் பல்வேறு வகையான கைவினைப் பொருட்களை தயாரித்தனர்.



இதனையடுத்து அவர்கள் ஆலம் கிரியேட்டிவ் என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் கைவினை பொருட்களை உருவாக்கி வருகின்றனர்.இவர்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை அவர்களுக்கு ஊதியமாகவும், அவர்களது குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.  வெட்டிவேரில் மாலைகள், விசிறிகள் மற்றும் எம்ராய்டரி வொர்க், கைமுறை காகித பொருட்கள் போன்ற பரிசு மற்றும் கைவினைப்பொருட்கள் செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பரிசுப் பொருட்கள் கைவினைப் பொருட்கள் அனைத்தும் பேஸ் புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் மூலம் ஆர்டர் பெறப்பட்டு அதன் மூலம் விற்பனை செய்யப்படுவதாக ஆலன் கிரியேட்டிவ் நிறுவனர் அமலா தேவி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் இங்கு பணி புரியும் பி டெக் பட்டதாரியான ஹரிதா கூறுகையில், தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தால் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு செல்ல வேண்டும். ஆனால் இங்கு அப்படி இல்லை, நாம் நினைத்த நேரத்தில் அங்கு சென்று கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடலாம் என்கிறார்.



இவருடன் பணியாற்றும் இல்லத்தரசி ஒருவர் கூறுகையில், ஊரடங்கு காலத்தில் தனது கணவர் வேலை இழந்த நேரத்தில் இங்கு கைவினைப்பொருட்கள் மற்றும் எம்ராய்டரி வொர்க் செய்து  ஊதியம் ஈட்டி வருவதால்  குடும்பம் ஓரளவுக்கு வாழ்வாதாரம் பாதிக்காமல் கொண்டு செல்ல முடிந்தது என்று தெரிவித்தார்.ஊரடங்கு நேரத்தில் அனைவரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கைவினைப் தெரிந்த இப்பெண்கள் கஷ்டம் இல்லாமல் குடும்பத்தை கொண்டு செல்ல முடிந்ததாக பெருமையுடன் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பெண்களின் முயற்சியை ஆதரிக்கும் வகையில் இவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை வாங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: