புதுச்சேரியை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் முனுசாமிக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் 1967-ல் பிறந்த முனுசாமி அவரது தந்தையார் காலத்திலிருந்து தனது 10-வது வயதில் அதாவது 1977ஆம் ஆண்டு முதல் சுமார் 44 ஆண்டுகள் மண்பாண்ட தொழிலை செய்து வருகிறார். இவர் உருவாக்கிய மண்பாண்ட பொருள்களுக்கு வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு இருந்தது. வீட்டிற்கு தேவையான மண்பாண்ட பொருள்கள், தசரா கொலு பொம்மைகள், மற்றும் சிலைகள் செய்வது இவர்களின் வழக்கமாகும்.
இவர் உருவாக்கிய மண்பாண்ட பொருள்களில் மண் சங்கிலிகள், மற்றும் மிக உயரமான சிற்பங்களை கழட்டி மீண்டும் பொருத்தக் கூடிய வகையில் இருக்கும். உலகிலேயே புதுச்சேரியில் உள்ள அரிக்கமேட்டுப் பகுதியை சேர்ந்த சங்கராபரணி ஆறு களிமண்ணில் உருவாக்கிய 1/2 சென்டிமீட்டர் மண்பாண்ட பொருளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.மேலும் 1/2 சென்டிமீட்டர் முதல் 50 அடி உயரம் வரை சிற்பம் செய்ததற்கு சர்வதேச விருதான ஜியோகிராபிக் இண்டிகேஷன் 2001 என்ற இந்த விருதை முதன்முதலாக பெற்றவர்.
மேலும் புதுச்சேரியில் புகையில்லா அடுப்புகளை உருவாக்கி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளித்து அதற்கான விருதுகளையும் பெற்றவர். 1989ஆம் ஆண்டு கோத்ரா மைதானத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் முன்னிலையில் மண்பாண்டங்களை செய்து விளக்கமளித்த பெருமையும் முனுசாமிக்கு உண்டு.
அதுமட்டுமல்லாமல் இவர் செய்யும் மண்பாண்ட பொருள்களுக்கு அமெரிக்கா,கனடா, பிரான்ஸ், தாய்லாந்து, வியட்நாம், ஜெர்மனி, சிங்கப்பூர், உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வரவேற்பு பெற்ற முனுசாமி அங்கு கைவினை கலைஞர்களுக்கு மண்பாண்ட பொருட்கள் செய்வது குறித்து பயிற்சியும் அளித்து உள்ளார்.இதுபோன்ற சிறப்புமிக்க மண்பாண்ட பொருட்களை செய்யும் கலைஞரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.இதற்கான விழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது.அதில் மண்பாண்ட பொருள்களுக்கான பத்மஸ்ரீ விருதை முனுசாமிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது. அழியும் விளிம்பில் உள்ள மண்பாண்ட தொழிலை பாதுகாத்திடும் வகையில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. பெருமையாக உள்ளது. இந்த தலைமுறை இன்றி அடுத்த தலைமுறைக்கும் மண்பாண்ட பொருட்களின் பாரம்பரியத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் தன்னுடைய நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 43 ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலை செய்து வருகிறேன். சுமார் 78-க்கும் அதிகமான மாநில அரசு மற்றும் மத்திய அரசுகளின் விருதுகளை பெற்று உள்ளேன். ஆனால் தற்போது பத்மஸ்ரீ விருது வாங்கியது மண்பாண்ட தொழிலுக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். என்று தெரிவித்தார்.
கடந்த காங்கிரஸ் மட்டும் என் ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது பத்துக்கும் மேற்பட்ட முறை அப்போதைய முதல்வர்கள் தன்னை பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்தார்கள். ஆனால் தற்போது தான் அந்த விருது தனக்கு வழங்கப்பட்டிருப்பது பெருமையாக உள்ளது. என்றும் முனுசாமி தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.