உக்ரைன் போர் சூழல் கவலையளிக்கிறது - தமிழிசை சௌந்தரராஜன்
உக்ரைன் போர் சூழல் கவலையளிக்கிறது - தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் மீட்டெடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் மீட்டெடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக நாடு திரும்பிய புதுச்சேரியை சேர்ந்த மாணவி ரோஜா சிவமணிசென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தடைந்தார்.அவரை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி ரோஜா சிவமணி தமிழகத்தைச் சேர்ந்த மற்ற மாணவ-மாணவியர்களுடன் சென்னை விமான நிலையம் வந்திருக்கிறார்கள். மிகுந்த மன ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும் மாணவர்கள் அனைவமரையும் மீட்டெடுத்த பின்னரே மனம் நிம்மதி அடையும். இந்தியர்கள் அனைவரையும் மீட்டெடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
மத்திய அரசின் தீவிர முயற்சியால் மாணவர்கள் பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். 26-க்கும் மேற்பட்ட விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. நான்கு மத்திய அமைச்சர்கள் இத்தியர்கள் அனைவரையும் மீட்டெடுக்க சென்றிருக்கிறார்கள். அதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைவரின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்காலம் பற்றி கனவுகளோடு இருக்கிறார்கள். அவர்கள் பத்திரமாக மீட்டெடுக்கபட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
புதுச்சேரியைச் சேர்ந்த 23 நபர்களின் பெயர் பட்டியல் கிடைத்திருக்கிறது. இதுவரை பெற்ற தகவலின்படி மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகத் தெரிகிறது. மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்கும் அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளபட்டு வருகிறது. புதுச்சேரி அரசு தொடர்ந்து வெளியுறவுத்துறையிடம் தொடர்பில் இருந்து வருகிறது. மத்திய அரசோடு இணைந்து அனைத்து மாநிலங்களும் ஊக்கமளித்து வருகிறார்கள்.
இந்தியர்கள் அனைவரையும் மீட்பதற்காக மனிதாபிமானத்தோடு “ஆப்பரேஷன் கங்கா” திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பது மன நிம்மதியைத் தருகிறது. ஆனாலும் அங்கு ஏற்பட்டிருக்கிற போர் சூழல் கவலை அளிக்கிறது. எந்த சூழ்நிலையிலும் பாரத மக்களுக்கு நாம் பாதுகாப்பாக இருப்போம். புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் என்ற வகையில் புதுச்சேரி மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டெடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறேன் என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.