• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆயி மண்டபத்தில் சிலை: ஆயி அம்மையாரை கவுரவித்த புதுச்சேரி அரசு

ஆயி மண்டபத்தில் சிலை: ஆயி அம்மையாரை கவுரவித்த புதுச்சேரி அரசு

தாசி குலத்தில் பிறந்து தனது ஆசை மாளிகையை மன்னர் உத்தரவில் இடித்துவிட்டு மக்களுக்காக தனது இடத்தில் குளத்தினை வெட்டிய ஆயியின் சிறப்பை கண்டு மூன்றாம் நெப்போலியன் வியந்தார்.

  • Share this:
புதுச்சேரி அரசின் நினைவு சின்னமான
ஆயி மண்டபத்தில் முதல்முறையாக ஆயி சிலை வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸுக்கும்-சட்டப்பேரவைக்கும் எதிரேயுள்ள பாரதிபூங்காவில் அழகாய் அமைந்துள்ளது ஆயிமண்டபம். இந்த மண்டபத்தின் பெயருடைய ஆயி என்பவர் தேவதாசி பெண். 16ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
கடந்த 16ம் நூற்றாண்டில் பேரரசர் கிருஷ்ணதேவராயர் வேலூர் பயணத்தை முடித்து விட்டு புதுச்சேரி உழவர்கரையிலுள்ள தனது ஆதரவாளர் உய்யகுண்ட விசுவராயரை பார்க்க வந்தார்.

அப்போது புதுச்சேரி முத்தரையர்பாளையத்தில் இருந்த மாளிகையை கோயில் என நினைத்து வணங்கினார். ஆனால், அருகில் இருந்தோர் இது தாசியின் வீடு என்றனர். இதையடுத்து அந்த மாளிகையை இடிக்க மன்னர் உத்தரவிட்டார். தான் ஆசையாக கட்டிய மாளிகையே தானே இடிப்பதாகவும், அதற்கு கால அவகாசமும் தேவதாசி ஆயி கேட்டார். அதை மன்னர் ஏற்றார்.

இதையடுத்து தான் ஆசையாக கட்டிய மாளிகையை ஆயி இடித்ததுடன், அந்த இடத்தில் தனது செல்வத்தை கொண்டு மக்களுக்காக குளத்தை  உருவாக்கினார். இந்த குளம் புதுச்சேரி மக்களுக்கு முக்கிய நீராதாரமாக அமைந்தது. அதன் பின்னர் 18ம் நூற்றாண்டில் புதுச்சேரியில் பிரெஞ்சுகாரர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அப்போது தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அப்போதைய ஆளுநர் போன்டெம்ப்ஸ் பிரான்சில் ஆட்சி செய்த அரசருக்கு கடிதம் எழுதினார்.

மேலும் படிக்க: கொரோனா தடுப்பூசி போட கூவி கூவி அழைக்கும் சுகாதார பணியாளர்கள் - வைரல் வீடியோ

அதையடுத்து மூன்றாம் நெப்போலியன் உத்தரவின் பேரில் பொறியாளர் லாமைரெஸ்சே புதுச்சேரி வந்தார். 16ம் நூற்றாண்டில் ஆயி வெட்டிய முத்தரையர்பாளையத்திலுள்ள இக்குளத்தில் இருந்து நீளமான வாய்க்கால் வெட்டி தற்போதைய பாரதி பூங்கா வரை கால்வாய் அமைத்தார். அதன் மூலம் புதுச்சேரி நகருக்கு தண்ணீர் வந்தது. புதுவை தண்ணீர் பிரச்சினை தீர்ந்ததுதொடர்பாகவும், பொறியாளரை கவுரவிக்க அனுமதி கேட்டும் ஆளுநர் மூன்றாம் நெப்போலியனுக்கு கடிதம் எழுதினார்.

தாசி குலத்தில் பிறந்து தனது ஆசை மாளிகையை மன்னர் உத்தரவில் இடித்துவிட்டு மக்களுக்காக தனது இடத்தில் குளத்தினை வெட்டிய ஆயியின் சிறப்பை வியந்த மூன்றாம் நெப்போலியன் புதிய உத்தரவை பிறப்பித்தார். அதனால் 18ம் நூற்றாண்டில் உருவானது ஆயி மண்டபம்.

இதையும் படிங்க: புதுச்சேரி: போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகும் பாஜகவின் செல்வகணபதி!


கிரேக்க-ரோமானிய கட்டடக் கலை அம்சத்துடன் வெள்ளை நிறத்தில் பார்ப்போரை கவரும் விதத்தில் அமைந்தது ஆயி மண்டபம். பிற்காலத்தில் ஆயி மண்டபத்தை சுற்றி பாரதி பூங்கா அமைந்தது. தொடர்ந்து, இந்த மண்டபம் அரசின் நினைவு சின்னமானது. போதிய பராமரிப்பு இல்லாததால்,  ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கண்ணில் தினமும் படும் புதுச்சேரி அரசு சின்னமே   மோசமான நிலையில் காட்சியளித்தது.

இந்தோ - பிரஞ்சு உறவின் ஒரு முதன்மையான அடையாளமாகத் திகழும் இக்கட்டடத்தினை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று அரசுக்கு பலரும் கோரிக்கை வைத்தனர்.  இதையடுத்து,  Smart city திட்டத்தின் கீழ் இந்திய பிரெஞ்சு கலாச்சாரத்தை பறைசாற்றும் ஆயி மண்டபம் தற்போது புணரமைக்கப்பட்டு வருகிறது.
இதில் முதல்முறையாக ஆயி சிலை வைக்கப்பட்டுள்ளது. மார்பு அளவு சிலையின் கீழ் "ஆயி அம்மையார்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: