• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு.. 81 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாயின

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு.. 81 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாயின

நாராயணசாமி

நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், அங்கு 81 புள்ளி 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

 • Share this:
  புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கிய நிலையில், ஆர்வத்துடன் பொதுமக்கள் வாக்களிக்க வந்தனர். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி 21 வது வாக்குச்சாவடி மற்றும் தட்டாஞ்சாவடி, ஊசுடு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் இயந்திரம் பழுதானதால், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

  இந்தநிலையில் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் பெத்துசெட்டிப்பேட்டை உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வாக்களித்தார். வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.

  என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வழக்கம்போல் தனது ராசியான, பைக்கில் வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்தார். திலாசுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளிக்கு வந்த அவர், நல்ல நேரத்திற்காக 5 நிமிடங்கள் காத்திருந்து, பிறகு வாக்களித்தார்.

  இந்தநிலையில் புதுச்சேரியில் சுயேச்சை வேட்பாளர்கள் இருவரின் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. உழவர் கரை தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சிவசங்கரனின் காரை, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருபுவனை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் அங்காளனின் கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மேலும் படிக்க... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு தடை: தேர்தல் ஆணையம்

  பெரியார் நகரைச் சேர்ந்த குமார் என்பவர், குடும்பத்தினருடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றார். அப்போது, குமாரின் வாக்கு ஏற்கனவே பதிவாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த குமார், தாம் தற்போதுதான் வாக்களிக்க வருவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து, 49 P பிரிவின் கீழ், வாக்குச்சீட்டு முறைப்படி குமார் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.

  புதுச்சேரியில் 78.03 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் 90.79 சதவீத வாக்குகள் பதிவாகின.

  1. மண்ணாடிப்பட்டு- 87.78
  2. திருபுவனை- 86.55
  3. ஊசுடு- 88.46
  4. மங்கலம்- 86.37
  5. வில்லியனூர்- 81.36
  6. உழவர்கரை- 75.42
  7. கதிர்காமம்- 76.00
  8. இந்திராநகர்- 79.58
  9. தட்டாஞ்சாவடி- 75.08
  10. காமராஜ் நகர்- 76.78
  11. லாஸ்பேட்டை- 78.99
  12. காலாப்பட்டு- 83.90
  13. முத்தியால்பேட்டை- 77.22
  14. ராஜ்பவன்- 73.24
  15. உப்பளம்- 83.71
  16. உருளையன்பேட்டை- 80.54
  17. நெல்லித்தோப்பு- 81.30
  18. முதலியார்பேட்டை- 81.09
  19. அரியாங்குப்பம் - 82.41
  20. மணவெளி- 84.38
  21. ஏம்பலம்- 87.30
  22. நெட்டப்பாக்கம்- 85.77
  23. பாகூர்- 87.90
  24. நெடுங்காடு- 82.94
  25. திருநள்ளாறு- 83.90
  26. காரைக்கால் வடக்கு- 77.44
  27. காரைக்கால் தெற்கு- 75.04
  28. நிரவி- 81.50
  29. மாகி- 73.53
  30. ஏனாம் - 90.79  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: