Home /News /national /

போதை பொருட்களை ஒழிக்கும் வரை காவல்துறை ஓயாது - புதுச்சேரி ஐஜி சந்திரன் திட்டவட்டம்

போதை பொருட்களை ஒழிக்கும் வரை காவல்துறை ஓயாது - புதுச்சேரி ஐஜி சந்திரன் திட்டவட்டம்

புதுச்சேரி ஐஜி சந்திரன்

புதுச்சேரி ஐஜி சந்திரன்

புதுச்சேரி காவல்துறை ஐஜி சந்திரன் மாணவர்களிடம் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் ஒழிக்கும் வரை புதுச்சேரியில் காவல்துறை நடவடிக்கை தொடரும் என போதைமருந்து, போதை பொருட்களால் தீமைகள் குறித்த கல்லூரி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் முழுவதும் போதை பொருளை பயன்படுத்தும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி போதை தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இதனையொட்டி புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் வளாகத்தில் மாணவர்களுக்கு போதைமருந்து, போதை பொருட்கள் பயன்படுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் புதுச்சேரி காவல்துறை ஐஜி சந்திரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார். தொடர்ந்து மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை ஆக கூடாது என்றும் இதனால் மாணவர்களின் வருங்காலம் பாதிக்கும் எனவும் அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: பாலியல் தொழிலாளர்களை மாண்புடன் நடத்த வேண்டும் - காவல்துறை, ஊடகங்களுக்கு நீதிபதிகள் வழிகாட்டுதல்

புதுச்சேரியில் போதை பொருட்கள் முழுவதும் இருக்கக்கூடாது எனவும் புதுச்சேரி காவல்துறை இதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் எடுத்து வருகின்றது என்றார். கல்லூரி மற்றும் பள்ளியில் இதுபோன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருவதாக கூறிய அவர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் ஒழிக்கும் வரை புதுச்சேரியில் காவல்துறை நடவடிக்கை தொடரும் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆப்ரேஷன் கஞ்சா என்ற பெயரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டுவருகிறது
Published by:Ramprasath H
First published:

Tags: Cannabis, Drug addiction, Puducherry, Tamil News

அடுத்த செய்தி