புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான 'பார்' மீது வெடிகுண்டு வீச்சு...!

புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான 'பார்' மீது வெடிகுண்டு வீச்சு...!
வெடிகுண்டு வீசிய இளைஞர்கள்
  • News18
  • Last Updated: December 16, 2019, 2:48 PM IST
  • Share this:
புதுச்சேரியில் திமுக எம்எல்ஏவிற்கு சொந்தமான மதுபான பார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருபுவனை, திருவண்டார்கோயில், கொத்தபுரிநத்தத்தில் தி.மு.க எம்.எல்.ஏ. சிவாவிற்கு சொந்தமான மதுபான பார் உள்ளது.

இந்த பாருக்கு நேற்று இரவு 10 மணிக்கு 3 இளைஞர்கள் வந்துள்ளனர். மதுபாட்டிலை வாங்கிக்கொண்ட அவர்கள் காசு கொடுக்காமல் வாக்குவாதம் செய்துள்ளனர்.


தங்களிடமே காசு கேட்கிறீர்களா என ஊழியர்களை மிரட்டிய அந்த இளைஞர்கள், கடைக்கு வெளியே வந்து 2 நாட்டு வெடிகுண்டுகளை பாரின் மீது வீசிவிட்டு தப்பினர்.

நாட்டு வெடிகுண்டு வீசியதில் பாரின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. மதுபாட்டில்களும் உடைந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சிசிடிவி காட்சிகளை சேகரித்து திருபுவனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see...
First published: December 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்