Home /News /national /

காதலர்கள் தினம் கொண்டாட்டம்: புதுச்சேரி கடற்கரையில் காதலர்களிடம் தீவிர விசாரணை செய்த போலீசார்

காதலர்கள் தினம் கொண்டாட்டம்: புதுச்சேரி கடற்கரையில் காதலர்களிடம் தீவிர விசாரணை செய்த போலீசார்

காதலர்களிடம் காவல்துறை விசாரணை

காதலர்களிடம் காவல்துறை விசாரணை

புதுச்சேரியில் கடற்கரை சாலை மற்றும் பாரதி பூங்காவில் காதல் ஜோடிகளுக்கு போலீசார் கெடுபிடி அளித்தனர்.

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. புதுச்சேரியில் வார விடுமுறையையொட்டி வெள்ளிக்கிழமை மாலையே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதில் காதல் ஜோடிகள் அதிகளவில் இடம் பெற்றிருந்தனர். இன்று காதலர் தினத்தையொட்டி நகர பகுதியில் உள்ள சாலைகளில் காதல் ஜோடிகளின் நடமாட்டம் அதிகம் இருந்தது. பாரதி பூங்காவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காதல் ஜோடிகளின் விபரம் கேட்டனர். கையில் பூக்கள், சாக்லெட்டுடன் காதலர்கள் இருந்ததை காண முடிந்தது.

போலீசாரின் கெடுபிடியால் காதலர்கள் தனித்தனியாக பாரதி பூங்காவில் நுழைந்து பின்னர் ஜோடியாக அமர்ந்தனர். அவர்களை போலீசார் விசாரித்தனர். இதனால் காதல் ஜோடிகள் அங்கிருந்து கிளம்பினர். கடற்கரை சாலைக்கு வந்த காதல் ஜோடிகளிடம் போலீசார் கெடுபிடியாக நடந்துகொண்டனர்.

காதலர்களிடம் காவல்துறை விசாரணை


வெளிமாநிலத்திலிருந்து வந்த காதல்ஜோடிகளிடம், முக கவசம் அணியவில்லை என அபராதம் விதித்தனர். இதனிடையே ஜாதி, மத ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கும் வாய்ப்பாக உள்ள காதலை போற்றுவோம் என வலியுறுத்தி தந்தை பெரியார் திக சார்பில் பாரதி பூங்கா, கடற்கரைக்கு வந்த காதலர்களுக்கு பூக்கள் வழங்கப்பட்டது.

Valentine's Day 2022 : காதல் , காமம் , ஈர்ப்பு... இவை மூன்றையும் இன்றைய இளைஞர்கள் குழப்பிக்கொள்கிறார்களா..? உண்மையில் காதல் உணர்வு எப்படி இருக்கும்..?



இதில் மாநிலத் தலைவர் வீரமோகன், துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ், பொருளாளர் பெருமாள், இளைஞரணி தலைவர் சிவமுருகன், தொழிற்சங்க தலைவர் ஜெகன், மகளிரணி தலைவர் சுகந்தி,  மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன்,  தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா உட்பட பலர் கலந்துகொண்டு காதலர்களுக்கு பூக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
Published by:Karthick S
First published:

Tags: Puducherry, Valentines day

அடுத்த செய்தி