படகில் மறைத்து வைத்து கள்ளச்சாராயம் கடத்தல் - 400 லிட்டர் பறிமுதல்!

பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயம்

கள்ளசாராயம் தயாரிப்பதற்கான எரிசாராயம் 50 லிட்டரையும்  அதனை கொண்டு கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுச்சேரியின் ஏனாம்  பிராந்தியத்தில் படகில் கடத்த இருந்த கள்ளச்சாராயத்தை போலீசார் கைப்பற்றினர்.

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநில  கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ளது. ஏனாம் பிராந்தியத்திற்கு உட்பட்ட சில தீவுகள் உள்ளன. இங்கு மர்ம நபர்கள் கள்ளச்சாராயத்தை தயாரித்து வருகின்றனர். இதுகுறித்து கிடைக்கும் தகவலை எடுத்து போலீசார் மற்றும் கலால் துறையினர் விரைந்து சென்று அவற்றை அழித்து வருகின்றனர். இருப்பினும் ஏனாமில் தயாரிக்கப்படும் கள்ளச்சாராயம் நூதன வழிகளில் ஆந்திராவிற்கு கடத்தப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் "தரிலாடிட்பா" என்னும் தீவில் இருந்துபடகு வழியே கள்ளசாராயம் கடத்தப்படுவதாக தகவல் வந்தது.  கோதாவரி ஆற்று வழியே படகில்  கள்ளச்சாராயம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலின் படி அங்கு சென்று சோதனையிட்ட போது படகில் எதுவுமில்லை. ஆனால் மீன்பிடிக்கும் வலைகள் மட்டும் நீரில் மூழ்கி இருந்தன. இதனை அடுத்து கலால் துறை மற்றும் போலீசார் வலை இழுத்த போது வலைக்கு கீழே கள்ளச்சாராய கேன்கள் இருப்பது தெரியவந்தது.

Also read... நூதன முறையில் அதிகரிக்கும் பெட்ரோல் திருட்டு... தீர்வு ஒரே ஒரு பூட்டு

கமலின் நாயகன் படபாணியை கையாண்டு ஆற்று வழியே கள்ளச்சாராயம் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து படகை பறிமுதல் செய்து அவற்றில் இருந்த 400 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளசாராயம் தயாரிப்பதற்கான எரிசாராயம் 50 லிட்டரையும்  அதனை கொண்டு கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்களையும் போலீசார் கைப்பற்றினர். படகின் உரிமையாளர் குறித்தும் தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்தும் ஏனாம்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தை கடத்தல் கேந்திரமாக பல ஆண்டுகளாக ஒரு கும்பல் மாற்றி வைத்துள்ளது.இதனை தடுக்க இனி வரும் காலங்களில் அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என ஏனாம் மண்டல நிர்வாகி அம்மன் சர்மா தெரிவித்துள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: