திருந்தி வாழ்ந்த ரவுடி கொலை - எதிரிகளோடு நட்பு பாராட்டியதால் கொன்றதாக கூட்டாளிகள் வாக்குமூலம்

ரவுடி திப்லானை கொலை செய்த அவரது கூட்டாளிகள்

திருந்தி வாழ்ந்த ரவுடி அடித்து கொன்ற வழக்கில் அவரது கூட்டாளிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட திப்புராயப்பேட்டையை சேர்ந்த மணி கண்டன்-நரசிங்கம் ஆகிய இருவரை ஒரு கும்பல் கொலை செய்தது. இந்த இரட்டை கொலையில்  திப்புராயப்பேட்டையை சேர்ந்த திப்லான் (30) உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள திப்லான் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு திருந்தி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவரை ஒரு கும்பல்  5 ம் தேதி அரியாங்குப்பம் அரிக்கன்மேடு பகுதிக்கு அழைத்து சென்று அடித்து உதைத்து கை-கால்களை உடைத்தது. மேலும் அரசு மருத்துவமனை முன் அவரை ரத்த வெள்ளத்தில் கொண்டு வந்து போட்டுச் சென்றது. இத்தகவல் அறிந்து திப்லானின் தந்தை லெனின் மற்றும் நண்பர்கள் விரைந்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த ஞாயிற்றுகிழமை அனுமதிக்கப்பட்ட திப்லான் 7ம் தேதி  காலை 9 மணிக்கு உயிரிழந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் திப்லான் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது அவரின் கூட்டாளிகள் என்றும் அவர்கள் அரியாங்குப்பம் பகுதியில் திப்பலானை அடித்து அரசு மருத்துவமனை அருகே அவரை வீசிவிட்டு சென்றுள்ளனர் என்றும் கண்டுப்பிடித்தனர்.

மேலும் கூட்டாளிகளை தேடி வந்த நிலையில் அவர்கள் ஏ.எஃப்.டி மைதானம் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அங்கு விரைந்து சைமன் உட்பட 7 பேரை கைது செய்து கொரோனா பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

அப்போது கைதானவர்களில் சவுந்தர் மற்றும் கவுசிக் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களை மருத்தவமனையில் அனுமதித்த போலீசார், மற்ற ஐந்து பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள், திப்பலானுக்கு  திருமணமானதை அடுத்து  குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து மனைவி, குழந்தைகளுடன் திருந்தி வாழ தொடங்கி பெயிண்டிங் வேலைக்கு சென்றதாகவும் தெரிவித்தனர். மேலும் தங்களுடன் தொடர்பை குறைத்து கொண்டு எதிரிகளுடன் நட்பு பாராட்டியதாகவும் தெரிவித்தனர்.Also read... சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளோர் இரண்டாவது பட்டியல் மத்திய அரசிடம் ஒப்படைப்பு - முழு விபரம்

கொலை வழக்கில் தங்களை  இணைத்து வாழ்க்கையை சீர் அழித்து விட்டு திப்லான் மட்டும்  திருந்தி வாழ்வதால் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக கூறினார்கள். மேலும் திப்பளானை அரியாங்குப்பம் அரிக்கமேடு பகுதியில் கட்டி வைத்து கட்டை மற்றும் இரும்பு தடியால் தாக்கி அவரை அரசு மருத்துவமனை அருகே வீசிவிட்டு சென்றதாக ஒப்புகொண்டுள்ளனர்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட திப்பலானின் கூட்டாளிகளான சைமன், ஜான் டேவிட், வெங்கடேஷ், தணிகை அரசு, தேச்சப்பன் ஆகியோரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர், மேலும் அவரை தாக்க பயன்படுத்தி இரும்பு தடி மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published: