அரிசிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் - பிரபல ரவுடி கைது
அரிசிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் - பிரபல ரவுடி கைது
பிரபல ரவுடி கைது
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சுமன் (30) இவர் மீது நான்கு கொலை வழக்கும் 5 கொலை முயற்சி, வெடிகுண்டு வீச்சு வழிப்பறி என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டுகளை அரிசி பைக்குள் மறைத்து கொண்டு வந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சுமன் (30) இவர் மீது நான்கு கொலை வழக்கும் 5 கொலை முயற்சி, வெடிகுண்டு வீச்சு வழிப்பறி என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.சமீபத்தில் இவர் பெரியக்கடை பகுதியில் செல்போன் கடை உரிமையாளரை கடத்திய வழக்கில் கைதாகி காலாப்பட்டு சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு சுமன் சேதராபட்டு பகுதியில் சென்ற போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் அவ்வழியே வந்த சுமனை சுற்றிவளைத்து அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டதில் அரிசி பைகளில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சுமனை கைது செய்த போலீசார் அவர் எடுத்த வந்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் சேதராப்பட்டு அடுத்துள்ள துத்திப்பட்டு கிராமத்தில் வசிக்கும் தனது உறவினரை சந்திப்பதற்காக சுமன் வந்ததாகவும் தனது பாதுகாப்புகாக நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்ததை அடுத்து, கைது செய்யப்பட்ட சுமனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.