Home /News /national /

3 ஸ்டேட் போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கில்லாடி லேடி.. ஒரே பாணியில் நூதன திருட்டு - புதுச்சேரியில் சிக்கிய பட்டதாரி பெண்

3 ஸ்டேட் போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கில்லாடி லேடி.. ஒரே பாணியில் நூதன திருட்டு - புதுச்சேரியில் சிக்கிய பட்டதாரி பெண்

புதுச்சேரியில் பட்டதாரி பெண் கைது

புதுச்சேரியில் பட்டதாரி பெண் கைது

pudhucherry : புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள ப்யூட்டி பார்லர்களில் வாடிக்கையாளர் போல் நடித்து நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆந்திராவை சேர்ந்த பெண்ணை புதுச்சேரி போலீசார்  கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமி (43). இவர் புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையம் எதிரே பெண்களுக்கான அழகு நிலையம் மற்றும் தையலகம் வைத்துள்ளார். கடந்த 9 ஆம் தேதி மதியம் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து லட்சுமியிடம், தான் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதாகவும் ஆதரவற்றோருக்கு கொடுப்பதற்கு அதிக அளவில் துணிகள் தைக்க வேண்டி உள்ளது. இதற்காக தனது தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர் வர உள்ளதாக கூறினார்.

அவருக்கு அதிக அளவில் நகைகள் அணிந்து ஆடம்பரமாக இருப்பது பிடிக்காது என்று அந்த பெண் கூறியதை நம்பிய லட்சுமி தன் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன்  செயின், கமல் ஆகியவற்றை கழற்றி வரவேற்பறையில் உள்ள தனது மேஜை ட்ராயரில் வைத்துவிட்டு உள்ளே சென்று வருவதற்குள் அந்த பெண்  நகைகளுடன் மாயமானார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமி எதிரே உள்ள மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவை குறித்து கூறி புகார் அளித்தார்.

Also Read:  நகை வாங்குவது போல் நடித்து கொள்ளை.. நெல்லையில் டிப்டாப் வாலிபர்கள் கைவரிசை

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் அந்த பெண் கடைக்குள் செல்வது பதிவாகி இருந்ததை அடுத்து கேமிராவில் பதிவான உருவத்தை கொண்டு அந்த பெண் யார் என்பதை கண்டுப்பிடிப்பதில் போலீசார்க்கு தொய்வு ஏற்பட்டது.

இதனையடுத்து இவ்வழக்கை வடக்கு கண்காணிப்பாளர் பக்தவசலம் வடக்கு குற்ற பிரிவு போலீசாருக்கு மாற்றம் செய்து  தீவிர விசாரணையில் ஈடுப்பட்டதில் புதுச்சேரியில் நடந்து போலவே இதே பாணியில் இந்த மாதம் மட்டும் கடலூர், திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில்  ஒரு பெண் இப்படி நூதன முறையில் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது

இதனையடுத்து அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்த போலீசார் அதன் அடிப்படையில் கிடைத்த தகவலின் படி அந்த பெண் ஆந்திரா மாநிலம் கடப்பாவை பூர்விகமாக கொண்ட பட்டாதாரி பெண் டெய்சி மார்ட்டின் (39) என்பது தெரிய வந்தது. தற்போது சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வருவதை கண்டுப்பிடித்த போலீசார் டெய்சியை  பள்ளிக்கரணையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.

Also Read: ஈபிஎஸ் ஆட்சியில் UPS-க்கு வேலையில்லை.. ஆனால் இப்போ? - திமுக அரசை விமர்சிக்கும் எச்.ராஜா

விசாரணை மேற்கொண்டதில் அவர் கடப்பாவில் இருந்து சென்னை வந்து வசித்து வருவதாகவும் இத போல் பல இடங்களில் நூதன திருட்டில் ஈடுப்பட்டு இருப்பதும் கடந்த 2017 முதல்  ஆந்திராவில் மட்டும் 20 வழக்குகளும் தமிழகத்தில் 6 வழக்குகளும் இதுவரை இவர் மீது நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து டெய்சியிடம் இருந்து புதுச்சேரியில் இருந்து திருடி செல்லப்பட்ட 10 சவரன் தங்க நகைகளை அடகு கடையில் இருந்து மீட்ட போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் டெய்சியை திண்டிவனம், கடலூர், மற்றும் செங்கல்பட்டு போலீசார் புதுச்சேரி சிறையில் இருந்து  விசாரணைக்காக காவலில் எடுத்து அப்பகுதிகளில் திருடிய நகைகளை மீட்க திட்டமிட்டுள்ளதாக புதுச்சேரி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Crime News, Gold Theft, Police, Pudhucherry, Woman

அடுத்த செய்தி