• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெட்டிக்கடை முதல் பார் வரை வசூல் வேட்டை நடத்தும் ரவுடிகள் - புதுச்சேரி வியாபாரிகள் கலக்கம்

பெட்டிக்கடை முதல் பார் வரை வசூல் வேட்டை நடத்தும் ரவுடிகள் - புதுச்சேரி வியாபாரிகள் கலக்கம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

புதுச்சேரியில் ஓசியில் மது குடித்துவிட்டு  மாமூல் கேட்டு கொடுக்காத பார் கேஷியரை கடத்திச்சென்று  தாக்கிய 5 ரவுடிகளை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்

  • Share this:
புதுச்சேரில் பாரில் மாமூல் கேட்டு காசாளரை தாக்கிய ரவுடிகளை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி வெள்ளாழ விதியில் சீசன் பார் மற்றும் ஓட்டல் உள்ளது. இதில் புதுச்சேரியை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் காசாளராக பணிபுரிந்து வருகிறார்‌. இந்த மதுபான கடைக்கு கோவிந்த சாலையை சேர்ந்த விக்கி மற்றும் அவரது நண்பர் ஜெய் அவருடன் மூன்று பேரும் மது அருந்தி உள்ளனர். சுமார் 1,600 ரூபாய்க்கு மது அருந்திய அவர்கள் பணம் கொடுக்காமல் பணம் கேட்ட காசாளரை அடித்து ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு, மேலும் தாங்கள் கேட்கும் போது மாதா மாதம் 5 ஆயிரம் ரூபாய் மாமூல் தர வேண்டும் என்று  கூறி சென்றனர்.

இதுபற்றி பெரிய கடை காவல் நிலையத்தில் காசாளர் புகார் செய்தார். இத்தகவல் அறிந்த அவர்கள்  இரவு 11 மணிக்கு மதுக்கடைக்கு வந்தனர். காசாளர் ராஜ்குமாரை இரவோடு இரவாக இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று, கோவிந்தசாலை  பகுதியில்  அடைத்து வைத்து அவரை  தாக்கி விட்டு ஓடினார்கள். இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ்குமார் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுப்பற்றி பெரியகடை காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் தனிப்படை அமைத்து மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகளை தேடிவந்தனர்‌.

Also Read: பணமே இல்ல.. இந்த வீட்ட எல்லாம் எதுக்கு பூட்டுறீங்க  – கலெக்டருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்ற  திருடர்கள்

இந்த நிலையில்கோவிந்த சாலையை சேர்ந்த விக்கி, ஜெய், அருண், மற்றும் கென்னடி நகரை சேர்ந்த பாம்பு நாகராஜ், முகேஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த விசாரணையில்  குற்றவாளிகள் 5 பேரும் மேலும் பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ளவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பெரியகடை போலீசார் ஐந்து பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் நகைக்கடைகள், பாத்திரக் கடைகள், துணிக்கடைகள், வீதியில் உள்ள பெட்டிக் கடைகள், உள்ளிட்ட அனைத்திலும் ரவுடிகள் மாமூல் கேட்டு வருவது புதுச்சேரி வியாபாரிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . இதற்கு போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து ரவுடிகளை கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: