புதுச்சேரியில் சிறுவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்தவர் கைது

புதுச்சேரியில் இளைஞர்கள்-சிறுவர்களை குறி வைத்து கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் சிறுவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்தவர் கைது
கைது செய்யப்பட்ட மாரிமுத்து
  • Share this:
வில்லியனூர் பகுதியை சேர்ந்த நடராஜன் நகரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் குறிவைத்து கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் அவரது வீட்டில் சோதனை நடத்துவதற்காக தாசில்தார் மற்றும் போலீசார் அவர் வீட்டுக்குச் சென்ற பொழுது வீட்டு முன்பு நின்றிருந்த சிறுவர்களுக்கு சிறிய அளவிலான கஞ்சா பாக்கெட்டுகளில் விற்கப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவர்களையும், கஞ்சா விற்ற மாரிமுத்துவையும் போலீசார் பிடித்தனர். மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது 2 கிலோ அளவிலான கஞ்சா பாக்கெட்டுகள் பிடிபட்டன.


Also read... கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை என வழக்கு - அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இதனையடுத்து மாரிமுத்துவை கைது செய்தபோலீசார் கொரோனா சோதனைக்கு பின் சிறையில் அடைத்தனர். கஞ்சா வாங்க வந்த சிறுவர்களை எச்சரித்து அனுப்பினார்.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading