• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தோ - பிரெஞ்சு கலாச்சாரத்தை பறைசாற்றும் போலீஸ் தொப்பி!

இந்தோ - பிரெஞ்சு கலாச்சாரத்தை பறைசாற்றும் போலீஸ் தொப்பி!

புதுச்சேரி காவல் துறையில் தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் அணியும் தொப்பி எந்த மாநிலத்திலும் தனித்துத்துவம் வாய்ந்தது.

  • Share this:
புதுச்சேரி காவல்துறையானது 1954 -க்கு முந்தைய பிரெஞ்சு காலனித்துவ ஆட்சிக் காலத்திற்கு முந்தையது. தனி ஆயுத மற்றும் உள்நாட்டு (உள்ளூர்) போலீஸ் பிரிவுகள் அக்காலத்தில் பராமரிக்கப்பட்டன.

இந்தியாவில், பாண்டிச்சேரி, யானம், காரைக்கால் மற்றும் மஹேவின் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியின் போது,"கேப்பி" எனப்படும் போலீஸ் தொப்பி ​​இரண்டு வகையான போலீஸ்காரர்களால் அணியப்பட்டது. சட்டம்-ஒழுங்கு படையினர் பிரகாசமான சிவப்பு தொப்பிகளை அணிந்திருந்தனர். ஆயுதம் தாங்கிய போலீசார்  நீல நிற தொப்பியால் தெளிவாகத் தெரிந்தனர்.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு பிரெஞ்சு காலனித்துவ பகுதிகள் புதுச்சேரி யூனியன் பிரதேசமாக ஒருங்கிணைக்கப்பட்டது. அன்று முதல் பிரகாசமான சிவப்பு தொப்பி தலைமை காவலர்களின்  தலைக்கவசமாக தொடர்கிறது. முன்னாள் காலனித்துவவாதிகள் விட்டுச்சென்ற கலாச்சார மற்றும் நிர்வாக மரபுகளை இது குறிக்கிறது. புதுச்சேரி போலீசாரின் சீருடையின் தனித்துவமான அம்சமாக பிரெஞ்சு கெப்பி இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தலைமை காவலர்களுக்கு சிவப்பு தொப்பியில் ஜெரி வைக்கப்பட்டிருக்கும். காவலர்களுக்கு கருப்பு பட்டை கொண்டு வித்தியாசப்படும். கோரிமேட்டில் NCC house என்ற பெயரில்  10 ஆண்டுகளாய் இயங்கும் கடையில் இந்த தொப்பி கிடைக்கிறது.

புதுச்சேரிக்கென பிரத்யோகமாக பஞ்சாப், மைசூரில் இருந்து இவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் வரலாற்றை DGP அலுவலகம் அருகில் காவல் அருங்காட்சியகம் வெளிப்படுத்துகிறது.. இங்கு பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் காவல் துறையில் பயன்படுத்திய ஆயுதங்கள், உடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அனைவரது கவனத்தைகாவல் துறையின் தொப்பி ஈர்க்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: