முதலமைச்சர் கார் முற்றுகை.. தடியால் ஊழியர்களை விரட்டிய போலீசார்

புதுச்சேரியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் முதலமைச்சர் நாராயணசாமியின் காரை வழி மறித்ததால் போலீசார் தடியடி நடத்தினர்.

முதலமைச்சர் கார் முற்றுகை.. தடியால் ஊழியர்களை விரட்டிய போலீசார்
புதுச்சேரியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் முதலமைச்சர் நாராயணசாமியின் காரை வழி மறித்ததால் போலீசார் தடியடி நடத்தினர்.
  • Share this:
புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை சார்பில்  உருளையன்பேட்டை தொகுதியில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டடுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டியும், 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்க தொட்டியும், நீர் உந்து குழாய்கள், நீர் பங்கீட்டு குழாய்கள், புதிய மீட்டருடன் கூடிய வீட்டு இணைப்புகள், மோட்டார் பம்புசெட் ஆகியவை ரூ.20 கோடி செலவில் ஹட்கோ நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா இன்று நடந்தது. விழாவுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கிட முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார். இதனிடையே பொதுப்பணித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பணிநிரந்தரம், சம்பள உயர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விழா அரங்கிற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து 4 அல்லது 5 பேர் மட்டும் முதல்வரை சந்திக்க செல்லலாம், மற்றவர்களை அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர், எம்எல்ஏக்களை பாதுகாப்பாக போலீசார் வெளியேற்றினர்.


மேலும் படிக்க...

3 பேருக்கு கொரோனா : ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை ஒரு வாரத்திற்கு மூடல்

அதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பிச்சென்றனர். அப்போது பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் திடீரென அதிகாரிகள் காரை வழிமறித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீசார் தடியை சுழற்றி ஊழியர்களை விரட்டியடித்தனர். இதனால் அரசு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading