புதுச்சேரியில் போதை பொருட்கள் விற்ற பொறியியல் பட்டதாரி கைது
புதுச்சேரியில் போதை பொருட்கள் விற்ற பொறியியல் பட்டதாரி கைது
போதை பொருட்கள் விற்ற பொறியியல் பட்டதாரி கைது
புதுச்சேரியில் பள்ளி-கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை பொருட்களை விற்று வருகிறது. இதனை ஒடுக்க போலீசார் தீவிர சோதனையை நடத்தி பலரை கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து புதுச்சேரியில் காரில் வைத்து விற்ற பொறியியல் பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் பள்ளி-கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை பொருட்களை விற்று வருகிறது. இதனை ஒடுக்க போலீசார் தீவிர சோதனையை நடத்தி பலரை கைது செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மேட்டுபாளையம் அரசு தொழிநுட்ப கல்லூரி எதிரில் தமிழக பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று சந்தேகப்படும் படியாக வெகு நேரமாக நின்று கொண்டிருப்பதாக மேட்டுபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்த ஒரு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட வஸ்துக்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து அங்கிருந்த இருவரை போலீசார் கைது செய்ய முயன்ற போது ஒருவர் தப்பி ஒடி விட்டார்.
மற்றொருவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் தமிழக பகுதியான திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த தீநாத் குமார் (25), இவர் ஆரணியில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வந்து மேட்டுபாளையத்தை சேர்ந்த ராஜூ என்கின்ற அன்புக்கு சப்ளை செய்து வருவதும் அவர் அதனை மேட்டுபாளையம் ராம் நகரில் உள்ள வீட்டை கிடங்காக பயன்படுத்தி புதுச்சேரியில் உள்ள சிறு கடைகளுக்கு விநியோகம் செய்துவந்ததும் தெரிந்தது.
தொடர்ந்து அந்த வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 380 கிலோ எடை கொண்ட 10 மூட்டை குட்கா போன்ற பொருட்கள், அதை எடுத்த வர பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் மற்றும் 19,500 ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் தீநாத் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெங்களூரில் இருந்து கார் மூலம் இவற்றை கடத்தி வந்து புதுச்சேரியில் உள்ள மாணவர்களை குறிவைத்து இவர் விற்பது தெரியவந்தது. பொறியியல் பட்டதாரியான தீநாத் குமார் வேலை கிடைக்காத காரணத்தால் பழைய கார் ஒன்றினை வாங்கி ஒருவருக்கு டாக்சி ஓட்டி நேர்மையாக செயல்பட்டுள்ளார்.
ஆனால் வண்டியை வாடகைக்கு எடுத்தவர் பெங்களூரில் இருந்து போதை பொருட்களை வாங்கி சென்னையில் விற்றுள்ளார். அவரை போலீசார் கைது செய்த நிலையில் தீநாத் குமார் அத்தொழிலை தத்தெடுத்தார்.
புதுச்சேரியில் வாடகைக்கு குடோன் எடுத்து காரில்ல போதை பொருட்களை கடத்தி வந்து விற்று வந்துள்ளார். தவறான தொழிலுக்கு பயன்படுத்திய சொகுசு காராலேயே தீநாத் குமார் சிக்கினார் என்பது குறிப்பிட தக்கது.
மேலும் புதுச்சேரியில் வீடு வாடகை எடுத்து அதனை கிடங்காக பயன்படுத்தி அதில் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்து புதுச்சேரி முழுவதும் விநியோகம் செய்து வந்த, தப்பி ஒடிய ராஜூ என்கின்ற அன்பு என்பவரை போலிசார் தேடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கார், இருசக்கர வாகனம் மற்றும் 50 மூட்டை போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.