புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் 3 பேரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி திரட்டும் வகையில் புதுச்சேரி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்படக்காரர் பட்டாபிராமன் தன்னுடைய தனிநபர் புகைப்படங்களை கண்காட்சியாக வைத்துள்ளார்.
புதுச்சேரியில் அன்றாட வாழ்க்கைகளை இந்த 23 புகைப்படங்கள் பிரதிபளிக்கின்றன. புதுச்சேரி வண்ண அருவி ஓவியக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த புகைப்பட கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அவரை தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எதிர்கட்சி தலைவர் சிவா ஆகியோர் கலந்துகொண்டு புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டு புகைப்படங்களை விலைக்கு வாங்கினார்கள்.
Must Read : மாணவி லாவண்யாவை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை - தஞ்சாவூர் எஸ்.பி விளக்கம்
இன்று தொடங்கிய இந்த கண்காட்சி வருகிற 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியில் விற்பனையாகும் புகைப்படத்திற்கான நிதி கொரோனாவால் உயிரிழந்த மூன்று பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.