கொரோனா நிதிப் பற்றாக்குறை: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை நாளை முதல் உயர்வு

புதுச்சேரியில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூபாய் 995 கோடி நிதி வழங்க முதல்வர் நாராயணசாமி கோரியிருந்தார். ஆனால், இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்காததால் கடந்த ஏப்ரல் 10ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான வரி ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டது.

கொரோனா நிதிப் பற்றாக்குறை: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை நாளை முதல் உயர்வு
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
  • Share this:
புதுச்சேரியில் கொரோனா நிதிக்காக சமீபத்தில் பெட்ரோல், டீசல் வரி ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டது. அதன்படி பெட்ரோல் மீதான வரி 22.15 சதவீதமும், டீசல் மீதான வரி 18.15 சதவீதமும் அமலுக்கு வந்திருந்தது. இச்சூழலில், மீண்டும் பெட்ரோல், டீசல் வரியை புதுச்சேரி அரசு நாளை (மே 29) முதல் உயர்த்தவுள்ளது. இதனால் புதுச்சேரி- காரைக்காலில் பெட்ரோல் மீதான வரி 28 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதாவது, சரியாக 5.85 சதவீதம் அதிகரிக்கிறது. அது போலவே டீசல் 21.8 சதவீதமாகிறது; சரியாக 3.65 சதவீதம் வரி உயர்கிறது.

இது மாஹே பிராந்தியத்தில் பெட்ரோல் வரி 23.9 சதவீதமாகிறது. இதன் உயர்வு சதவீதம் 1.75 ஆகும். டீசல் மீதான வரி உயர்வில்லை. ஏனாமில் பெட்ரோல் மீதான வரி 25.7 சதவீதமாகிறது. இதன் உயர்வு சதவீதம் 3.55 ஆகும். டீசல் வரி 20 சதவீதமாகிறது. அதன் உயர்வு 1.85 ஆகும். இந்த வரி உயர்வு 3 மாதங்களுக்கு  நடைமுறையில் இருக்கும் என்று நிதித்துறை செயலர் சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார்.Also see:
First published: May 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading